முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு

சென்னை, மே 11- சென்னை கலை வாணர் அரங்கில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள தமிழக சட்ட மன்ற அரங்கில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் உறுப்பினர் களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்க ளின் பதவி ஏற்பு விழா இன்று (11.5.2021) காலை நடைபெற்றது.

இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடியதும் தமிழக முதல்வர் மு..ஸ்டாலின் அவர் களை அமைச்சர்கள், சட்டமன்ற பேரவை செயலாளர் வரவேற்றனர். பேரவை அவைக்கு சென்று தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டிக்கு தமி ழக முதல்வர் வாழ்த்து தெரிவித்தார். பின்னர், புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்ட உறுப்பினர்கள் இந்திய அரச மைப்பின் மீது தமக்குள்ள பற்றுறுதி பிரமாணத்தை, உறுதி மொழியை முறைப் படி எடுத்துக்கொண்டு பத விப்பிர மாணம், உறுதிமொழி ஏற்ற னர். முன்னதாக, சட்டப்பேரவைச் செயலாளர் கி.சீனிவாசன் அவர்கள் அனைவரையும் முறைப்படி ஒவ் வொருவராக அழைத்தார். அதன் படி, கொளத்தூர் சட்டமன்ற உறுப் பினர் தமிழக முதல்வர் மு..ஸ்டா லின் உறுதி மொழி ஏற்றுக் கொண் டார். அவரைத் தொடர்ந்து, துரை முருகன், கே.என்.நேரு, அய்.பெரிய சாமி, .பொன்முடி, ..வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.இராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எஸ்.ரகுபதி, சு.முத்து சாமி, கே.ஆர்.பெரியகருப்பன், தா.மு.அன்பரசன், மு.பெ.சாமி நாதன், கீதா ஜீவன் உள்ளிட்ட அமைச்சர்களும், திமுக சட்டமன்ற உறுப்பினர்களும்உளமாரஎன கூறி உறுதி மொழி ஏற்றனர். இதைய டுத்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, .பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதி முக சட்டமன்ற உறுப்பினர்கள்கட வுள் அறியஎனக் கூறி உறுதி மொழி ஏற்றனர். மேலும் அனைத்து உறுப் பினர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

Comments
Popular posts
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
50% தடுப்பூசிகளை அபகரித்த 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள்
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image