உயிர்காக்கும் பணியில் சேவையாற்றி வரும் செவிலியர்களுக்கு ஊதிய உயர்வை வழங்கிய முதலமைச்சருக்கு பாராட்டு

இந்திய ஸ்டேட் வங்கி முன்னாள் தொழிற்சங்கத் தலைவர்கள் கூட்டமைப்பு

சென்னை, மே 13  தமிழக முதல்வர் மாண்புமிகு ஸ்டா லின் அவர்கள் தலைமையில் அமைந்துள்ள நல்லரசுக்கு இந்திய வங்கி முன்னாள் தொழிற்சங்கத் தலைவர்களின் கூட்டமைப்பின் சார்பில் நெஞ்சம் நிறைந்த, நல்லெண்ணத்துடன் கூடிய, வளமான வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இக்கூட்ட மைப்பின் தலைவர் எஸ்.பி. ராமன், பொதுச் செயலாளர் வி.ஆர்.உதயசங்கர் ஆகியோர் தெரிவித்திருப்பதாவது:

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுத் துயர்ப்படும் நோயாளிகளுக்குத் தேவை யான உயிர்வாயு (ஆக்சிஜன்), தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி, உயிர் காக்கும் மருந்துகள் ஆகியவற்றை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்து உயிரிழப்புகளைத் தவிர்க்க மேற்கொண்ட அறிவியல் பூர்வமான அணுகு முறை, அறிவார்ந்தோர் பாராட்டும் வண்ணம் அமைந்துள்ளது.

கண்ணுறக்கம் பாராமல், கவலைகளுக்கு ஆளாகாமல் மக்கள் நலம் காத்து வருகின்ற செவிலியரின் வாழ்வாதாரத் தை மேம்படுத்தும் வகையில் கைநிறைய ஊதியம் வழங்கிய  தமிழக முதல்வரின் சரியான முடிவு கருத்தாலும், கரத் தாலும் உழைக்கும் கோடிக் கணக்கான மக்களிடம் தலைமுறைகள் வாழ்த்தும் தகுதியான முடிவாகப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

செம்மாந்த செம் மொழியாம் தமிழ்மொழியின் மேன்மை யையும், தமிழர் தம் கலை, பண்பாடு, மற்றும் கலாசாரத் தனிச்சிறப்பு களையும் உலகறியும் வண்ணம் தமிழக அரசின் செயல்பாடுகள் அமையும் என்ற நம்பிக்கை யுணர்வு தமிழாய்ந்த தமிழறி ஞர்கள் மத்தியில் மகிழ்ச்சி அலைகளை உருவாக்கி யுள்ளது என்பதைப் பதிவு செய்யக் கடமைப்பட்டுள் ளோம்.

பதவி என்பது கொள்கை களை - செயல் திட்டங்களை நிறைவேற்றும் கருவிதானே தவிர அந்தஸ்தின் அடை யாளம் அல்லஎன்பதனை வாழ்க்கை நெறியாகக் கொண்டு செயல்படும் தமிழக முதல்வரும் அவரது நல்லரசும் அமைந்திருக்கின்றன.

நல்லெண்ணத்துடன் கூடிய வளமான வாழ்த்துக் களை உளமாரத் தெரிவிப் பதில் பெரு மிதம் அடை கிறோம் என தெரிவித்துள் ளனர்.

Comments
Popular posts
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
50% தடுப்பூசிகளை அபகரித்த 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள்
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image