ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 12.05.2021 டெக்கான் கிரானிக்கல், சென்னை:

· ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிப்பது தொடர்பாக தமிழக முதல்வர் மு..ஸ்டாலின் சட்டத்துறை அமைச்சர் மற்றும் அரசு தலைமை வழக்குரைஞருடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

· இந்தியாவில் கரோனா இரண்டாவது அலையினால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிக மோச மான நிலையை அடையும் என பொருளாதாரப் பேராசிரியர் ஜீன் டிரெட்ஜ் தெரிவித்துள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

· உலக சுகாதார நிறுவனம் கரோனாவை தொற்று நோய் என அறிவித்து அதன் அடிப்படையில் மோடி அரசும் தொற்று நோய் சட்டம் மற்றும், பேரிடர் மேலாண்மை சட்டத்தை நிறைவேற்றிய நிலையில், தற்போது மத்திய அமைச்சர் ஜவடேகர், சுகாதாரத் துறை மாநிலப்பட்டியலில் உள்ளது. மத்திய அரசு அவர்களுக்கு உதவி வருகிறது என்று சொல்வது ஏற்புடையதல்ல என சிவசேனா மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி கூறியுள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

· பெண்கள் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் என்ற தமிழக முதல்வர் மு..ஸ்டாலின்  அவரன்களின் அறிவிப்பு பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான எளிதானப் பயணமாகக் கருதப்படுகிறது.

· தமிழக சட்டமன்ற பேரவைத் தலைவராகவும் துணை பேரவைத் தலைவராகவும் திமுகவின் மூத்த உறுப்பினர்கள் எம்.அப்பாவு மற்றும் கு.பிச்சாண்டி ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தி இந்து:

· மராட்டியர்களுக்கான இட ஒதுக்கீடு செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததையடுத்து, இப்பிரச்சினையில் தலையிட்டு தீர்வு அளிக்குமாறு  மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்திற்கும்   . பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

பி.பி.சி. நியூஸ் தமிழ்:

· பீகாரைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேச மாநில எல்லையான காசிபூரில் உள்ள நதிக்கரையிலும் சில சடலங்கள் மிதந்துள்ளன. இந்த தகவலை காசிபூர் மாவட்ட ஆட்சியர் எம்.பி. சிங் உறுதிப்படுத்தினார். “சடலங்கள் மிதப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவை தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்,” என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

 - குடந்தை கருணா 

Comments
Popular posts
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
50% தடுப்பூசிகளை அபகரித்த 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள்
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image