தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் நான்கு தனிச் செயலாளர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு

சென்னை, மே 13 தமிழக முதல்வராக மே 7 அன்று தளபதி மு..ஸ்டாலின் பதவியேற்ற நிலையில், உடனடியாகத் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் மாற்றப்பட்டு வெ.இறையன்பு நியமிக்கப்பட்டார். மேலும், முதல்வருக்கு நான்கு தனிச் செயலாளர்களும் நியமிக்கப் பட்டனர்.

இந்நிலையில், முதல்வருக்கு நியமிக்கப்பட்டுள்ள 4 தனிச் செயலாளர்கள் கவனிக்க வேண்டிய துறைகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு 11.5.2021 அன்று வெளி யிட்டுள்ள உத்தரவு வருமாறு:

உதயச்சந்திரன் அய்ஏஎஸ் (முதல்வரின் முதன்மைச் செயலாளர் - 1)

1. பொது (அய்ஏஎஸ் உள்ளிட்ட அனைத்தும்)

2. லஞ்ச ஒழிப்பு ஆணையம்

3. தகவல் தொழில்நுட்பம்

4. உள்துறை (அய்பிஎஸ் உள்ளிட்ட அனைத்தும்)

5. கலால் துறை

6. உயர் கல்வித்துறை

7. பள்ளிக் கல்வித்துறை

8. சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை

9. தொழில்துறை

10. திட்டம் மற்றும் வளர்ச்சி

11. அறநிலையத் துறை

உமாநாத் அய்ஏஎஸ் (தனிச் செயலாளர் - 2)

1. ஆற்றல்

2. உணவு

3. சிறப்பு முயற்சி

4. மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை

5. போக்குவரத்து

6. வணிகவரி மற்றும் பதிவுத்துறை

7. உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் நீர் விநியோகம்

8. பொதுப்பணி (கட்டடம்)

9. நெடுஞ்சாலை மற்றும் துறைமுகம்

10. நீர் வளம்

11. நிதி

சண்முகம் அய்ஏஎஸ் (தனிச் செயலாளர் - 3)

1. மனிதவளம்

2. கூட்டுறவு

3. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை

4. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி

5. சட்டப்பேரவை

6. ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்

7. தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல்

8. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு

9. விவசாயம் - உழவர் நலத்துறை

10. சட்டம்

11. முதல்வர் அலுவலகம் சம்பந்தப்பட்ட நிர்வாகம்

அனு ஜார்ஜ் அய்ஏஎஸ் (தனிச் செயலாளர்- 4)

1. சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றம் மற்றும் காடுகள்

2. பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப் பட்டோர், சிறுபான்மையினர் நலன்

3. சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள்

4. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு

5. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்

6. சமூக நலத்துறை மற்றும் மகளிர் மேம்பாடு

7. கால்நடைத்துறை, பால் வளத்துறை, மீன்வளத்துறை - மீனவர்கள் நலன்

8. கைத்தறி, கைவினைப் பொருட்கள், டெக்ஸ் டைல், காதி

9. சுற்றுலா - கலாச்சாரம்

10. சமூகச் சீர்திருத்தம்

11. மாற்றுத்திறனாளிகள் நலன்

12. முதல்வர் அலுவல்கள் (அரசியல் அல்லாத)/ சுற்றுப் பயணங்களை நிர்வகித்தல்/அரசு நெறிமுறைகளை நிர்வகித்தல்”.

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image