செயலூக்கத்தின் மறுபெயர்தான் ஸ்டாலின்! அடுத்தவர் தோளில் ஏறி சில இடங்களைப்பெறுவது பா.ஜ.க.வின் வெற்றியல்ல! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 4, 2021

செயலூக்கத்தின் மறுபெயர்தான் ஸ்டாலின்! அடுத்தவர் தோளில் ஏறி சில இடங்களைப்பெறுவது பா.ஜ.க.வின் வெற்றியல்ல!

 செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர்!

சென்னை, மே 4 செயலூக்கத்தின் மறுபெயர்தான் தளபதி ஸ்டாலின் என்றும் மற்றவர்கள் தோளில் ஏறி சில இடங் களைப் பெறுவது பா...வுக்கான வெற்றியல்ல என்றும் செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் கூறினார். 

சென்னையில் தளபதி ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து வெளியில் வந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்

கி. வீரமணி அவர்கள்  செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாட்டின் வரலாற்றில் புதியதோர் ஆட்சி அமை கிறது. உண்மையான மக்களாட்சியைப் பிரதிபலிக்கக்கூடிய ஓர் ஆட்சி மக்கள் ஆணையின்படி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒப்பற்றத் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களுடைய தலைமையிலே அமையவிருக்கும் ஆட்சிக்கு நல்வாழ்த்துகளை தாய்க்கழகத்தின் சார்பாக நேரில் வாழ்த்துகளைத் தெரிவித்தோம். சிறிது நேரம் உரையாடிக்கொண்டிருக்கும்போதே, மகிழ்ச்சியாக ஒன் றைச் சொன்னோம்.  அவர் பதவி ஏற்கப்போவது 7ஆம் தேதி. ஆனால், அவர் முதலமைச்சராக ஆவதற்கு முன் னாலேயே, மக்கள் ஆணையை ஏற்று செயல்பட  3ஆம் தேதியிலிருந்தே தொடங்கி விட்டார்கள்.

கரோனாவின் கொடுந்தொற்று கடுமையாக இருக்கும் நேரத்தில் தன்னுடைய முதல் பிரச்சினை, ஆட்சியினுடைய முதல் சவால், தான் எதிர்கொள்ள இருப்பது- மிக முக்கியமானது இந்த கொடுந்தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும். மக்கள் அதற்குத் தயாராக இருக்க வேண்டும். மற்ற நோய்களையெல்லாம் பிறகு பார்க்கலாம், மதக்கிருமிகள், ஜாதிக்கிருமிகள் எல்லாமே இருப்பது அதையெல்லாம்கூடப் பிறகு பார்க்கலாம், நாடே சமத்துவபுரமாக மாறவேண்டும் என்பதெல்லாம் ஒரு பக்கத்தில் இருந்தாலும், முதலில் இதைச் செய்ய வேண்டும் என்பதற்காக, தலைமைச்செயலாளரையும், சுகாதாரத்துறைச் செயலாளரையும், காவல்துறைத் தலை வரையும் அழைத்து நேற்று ஒரு மணிநேரத்துக்கும் மேல் அவர்கள் ஆலோசனை செய்து, செயல்பட்டிருக்கிறார் என்றால்,  அந்த செயலூக்கத்தின் மறு உருவம்தான் தளபதி ஸ்டாலின் என்ற பெயர்.

எனவேதான்,  குறைந்த பட்சம் கரோனாவைத் தடுப் பதற்கு ஓர் அரசு இயக்கமாக மட்டுமே பார்க்காமல், அர சாங்க முயற்சிகள் என்று மட்டுமே கவனிக்காமல், இதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிய வேண்டும். ஒவ்வொருவரும் தடுப் பூசி போட்டுக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தனி நபர் இடைவெளியை மிகத் துல்லியமாகக் கண்காணிக்க வேண்டும். இவையெல்லாம் நம்முடைய கைகளிலே இருக்கும் எளிய முறைகள். இவற்றை செய்ய வேண்டும் என்பதிலே அவர்கள் ஆர்வம் காட்டி, மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காக சொன்னார்கள்.

அதோடு பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு செய்தியை சிறப்பாக சொன்னார்கள். எவைஎவையெல்லாம் பழைய ஆட்சியிலே குற்றங்களாக, அமைச்சர்கள்மீது புகார் களாக இருந்தனவோ, அவை அத்தனையும்  இல்லாத ஒரு நல்லாட்சியைக் கொடுப்பதற்கு தீவிரமாக முயன்று கொண்டிருக்கிறோம் என்று சொன்னார்கள். இதைவிட நல்ல செய்தி தமிழகத்துக்கு, உலகத்துக்கு வேறு கிடை யாது. எனவே, நல்லாட்சியை விரைவில் எதிர்பார்ப்போம்.

7ஆம் தேதி நிகழ்ச்சிகூட மிக எளிமையாக நடை பெறும் என்பதையும் சொன்னது சிறப்பானது! நாம் எதை பேசுகிறோமோ,  அதைச் செய்கிறோம். எதைச் செய் கிறோமோ அதைத்தான் பேசுவது நம்முடைய வாடிக்கை என்பதை நிரூபித்திருக்கிறார்கள். வாழ்த்துகளைத் தெரி வித்து விடைபெற்றிருக்கிறோம்.

செய்தியாளர்:  பா...வுக்கு 4 இடங்கள் என்பது வளர்ச்சி என்று நினைக்கிறீர்களா?

தமிழர் தலைவர்: வளர்ச்சி இல்லை. அடுத்தவருடைய தோள்மீது ஏறி நின்று கொண்டு உயரம் என்று சொன்னால், அதை எப்படி வளர்ச்சி என்று சொல்லமுடியும்?  சென்ற முறை தனியாக நின்றார்களே, அத்தனை இடத்திலும் டெப்பாசிட்டை இழக்கவில்லையா? கழகங்களே இல்லாத தமிழ்நாடு என்று சொல்லி, கோஷங்கள் கொடுத்தவர்கள், பிறகு இன்னொருவர் தோள் கிடைத்திருக்கிறது என்பதற்காக அவர்கள் அந்த தோள்மீது ஏறிக்கொண்டு, எங்களுடைய உயரம் எவ்வளவு பாருங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். தனியாக நின்று தாமரை மலரக் காட்டட்டும். அப்போது அது தடாகத்திலிருந்து மலருகிறதா அல்லது பாறையிலிருந்து மலருகிறதா என்பது தெரியும். அதுமட்டுமல்ல, அந்த தலைமையிலே இருக்கக்கூடிய முக்கியப் பொறுப்பாளர்களுக்குக் கொடுத்த தோல்வி இருக்கிறதே, அதிலிருந்து அவர்கள் பாடம் கற்க வேண்டும்.

செய்தியாளர்: தமிழக பாஜக இதை வெற்றியாக நினைக்கிறார்கள். தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்து விட்டது என்று சொல்கிறார்களே?

தமிழர் தலைவர்: தாமரை மலராது. தாமரை மலர்வதற்கு இன்னொரு தடாகத்துக்குப் போய் இருக்கிறார்கள். மற்றவர்களின் முயற்சியினாலேதான் நடந்திருக்கிறது. நான் முதலிலேயே சொன்ன தைப்போல், கழகங்களே இல்லாத நிலை என்று சொல்லி சொந்தக்காலிலே நின்று பார்க்கட்டும், அவர்கள் நோட்டாவைவிட அதிகமாக ஓட்டு வாங்கியிருக்கிறார்களா என்று காட்டட்டும்.

No comments:

Post a Comment