ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 8, 2021

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1:  புதிய கல்விக் கொள்கையை இந்தி உள்ளிட்ட 17 மொழிகளில் மொழி பெயர்த்த மத்திய பாஜக அரசு தமிழை புறக்கணித்தது மிகப் பெரும் கண்டனத்திற்கு உரியது அல்லவா?

- சீ. இலட்சுமிபதி, தாம்பரம்.

பதில்: கண்டனங்கள் தமிழ்நாட்டில் புயலாய் எழுந்தவுடன் பொந்திலிருந்து வந்தது போல சிலநாள்களில் தமிழாக்கம் வந்தது. முதலில் பதுங்கியதன் மர்மம் தான்என்னவோ!’ “அடிமேல் அடி அடித்தால்  அம்மியும் நகரும்என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது.

கேள்வி 2:  கடும் கரோனாவால் (2020)பாதிக்கப்பட்ட உலக நாடுகள் பலவும் அதிலிருந்து மீண்டு வந்துள்ள நிலையில், இந்தியா அதிலிருந்து மீளமுடியாமல் தவிப்பது ஏன்?

- எஸ். பத்ரா, வந்தவாசி.

கரோனா கொடூரமாக பரவி, ஏராளமான உயிர் சேதத்தை தந்து வரும் இந்த சூழலில் ஆக்சிஜன் தயாரிப்புக்கான முயற்சிகளை முன்னெடுக்காமல் ஆயிரக்கணக்கான கோடியில் சொகுசு பங்களா கட்டுவதில் முனைப்பாக உள்ளதே மத்திய அரசு?

- மன்னை சித்து, மன்னார்குடி

பதில்: சரியான வழிகாட்டுதலும், அறிவியல் அணுகுமுறை சிந்தனையும், செயலாக்கமும் இல்லாத மத்திய பா... அரசும் - அதன் வயப்பட்ட பல மாநில அரசுகளின் சனாதன வைதீக சிந்தனையும், கையாலாகாத்தன்மையும், எதை முன்னிலைப் படுத்த வேண்டுமோ, அதைச் செய்யாமல்வித்தைகளில்ஈடுபட்டதன் விளைவு இது!

இரண்டாம் அலைவீச்சின் இவ்வளவு கொடுமை தலைநகர் டில்லி, குஜராத், .பி., .பி.யிலும், பல வட இந்திய பா.ஜக. ஆளும் மாநிலங்களில்!  உயிர்ப்பலிகளும், தடுப்பூசி, உயிர்க்காற்று, படுக்கை, மயானபூமி பற்றாக்குறை பஞ்சம் ஏற்பட்டுள்ள வேதனை தாக்கும் இக்காலக்கட்டத்தில் பல அறிஞர்கள், தலைவர்கள், சில முதல்வர்கள் கேட்ட நியாமான  நிதி உதவி கேட்புக்கும், மத்திய அரசின் கைவிரிப்பு!  இப்போது 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு டில்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டுவதை விட தடுப்பூசிக்கும், உயிர்க்காற்று உற்பத்திக்கும் அல்லவா அதிகமாக செலவழிக்கப்பட வேண்டும். அது அல்லவா புத்திசாலித்தனம்; அந்த அணுகுமுறை இல்லையே, மோடி அரசிடம் என்று வெளிநாட்டு ஏடுகள் கூட எதிரான நிலைதான்!

கேள்வி 3: வடநாட்டில் கரோனாவால் இறந்த உடல்களை எரிப்பதற்குக்கூட இடுகாட்டில் இடம் இல்லாத அவலநிலை உதிரத்தை உறைய வைப்பதாக உள்ளதே!

- மல்லிகா, மாங்காடு.

பதில்: ஆம், இடஒதுக்கீடு போராட்டத்தின் உச்சமாக, மயான பூமிக்கும் கூட களத்தை உண்டாக்கும் கண்ணீர் படலம் இது!

கேள்வி 4: கரோனா பரவலுக்கு தேர்தல் கமிஷன்தான் காரணம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறும் நிலையில், கரோனா விதிமுறைகளை அமல்படுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பு என்று தேர்தல் கமிஷன் கூறி இருப்பதை எப்படி எடுத்துக் கொள்வது?

- இர. கலைவாணி, மேடவாக்கம்.

பதில்: தேர்தல் கமிஷன் ஏனோ இப்படிதும்பை விட்டு வாலைப் பிடித்துதப்பிக்கப் பார்க்கும் விந்தை!

கேள்வி 5:   தமிழ்நாட்டில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை மத்திய அரசு எடுத்துக் கொள்ளும் என்று உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசின் வழக்குரைஞர் கூறி இருப்பது நியாயமா?

- காஞ்சனா, காஞ்சிபுரம்.

பதில்: முன்னுரிமை தமிழ்நாட்டுக்குத் தந்து பிறகு மற்றவர்களுக்கும் என்பதை வலியுறுத்த ஏனோ  தமிழ்நாடு அதிமுக அரசு அல்லது காபந்து அரசு தவறியது?

கேள்வி 6:  இந்த தேர்தலில் திராவிட  இயக்கத்தின் மனிதநேய சமத்துவ கோட்பாடுகளுக்கு எதிரான இன வாதம் பேசும் கட்சி பல இடங்களில் மூன்றாம் இடத்தில் வந்துள்ளதே. இதிலிருந்து இளைஞர்களை மீட்க கழகப் பொறுப்பாளர்களுக்கு தாங்கள் தரும் ஆலோசனை என்ன?

-மணிமேகலை, வியாசர்பாடி.

பதில்: மூன்றாவது இடத்திற்கு வந்தது என்பது தவறான பார்வை; சரியாக சொல்ல வேண்டுமானால் அவர்கள் இருப்பது தோற்றவர்களின் வரிசை. வெற்றி பெற்றதை எல்லாம் கணக்கிட்டால்  மூன்றாவது இடத்தில் அல்ல;  9ஆவது இடத்தில் தான்  நிற்க முடியும். ஊடகங்களின்பில்டப்அது!

கேள்வி7 :  நாட்டில் மழையின்றி வறட்சி ஏற்பட்டாலும், கரோனா தொற்றால் மக்கள் மாண்டு மடிந்தாலும் யாகம், கும்பாபிஷேகம் எனும் பெயரில் பார்ப்பனர்களுக்கு நாள் தோறும் நல்ல வருமானம் கிடைத்து வருகிறது. இவ்விடயத்தில் அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் பாமர மக்கள் மட்டுமன்றி படித்த பண்பாளர்களும் பார்ப்பனர்களிடம் மண்டியிட்டுக் கிடப்பது சரியா?

- இல. சீதாபதி, மேற்கு தாம்பரம் .

பதில்: வாழ்ந்தாலும் வருமானம்; செத்தாலும் வருமானம் - ‘பூதேவாளுக்கு’. அவாளுக்கு எல்லாம் தொழில் சீசனே! படித்த பாமரரைத் திருத்துவது மகா கடினம் - காரணம்மமதை’!

கேள்வி 8:  இரண்டு கிலோ அரிசி போதாது என்றால் நீங்கள் சாவது நல்லதுஎன்று விவசாய சங்கப் பிரதிநிதியிடம் கருநாடக உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் உமேஷ் கூறி இருப்பது ஜனநாயக நாட்டிற்கு இழுக்கு அல்லவா?

- இரா.அலமேலு, செங்குன்றம்.

பதில்: பா.. அமைச்சர்கள் எப்படிப்பட்ட தலைசிறந்த மனிதாபிமானிகள்  - ‘புண்ணிய வான்கள்’ (அவாள் மொழியில்) என்பது இப்போதாவது புரிந்தால் சரி!

கேள்வி 9:  திராவிட இயக்க ஆட்சி ஏற்பட்டு நூற்றாண்டு காணும் நிலையில் முற்றிலும் பார்ப்பனர் அல்லாத சட்டப் பேரவை அமைந்துள்ளது குறித்து தங்கள் கருத்து?

- மாவீரன், உடையார்பாளையம்.

பதில்: ‘பெரியார் மண்இது என்று உறுதி செய்யப்பட்டு காலத்திற்கும் பிரகடனப்படுத்தபடுகிறதே!

கேள்வி 10:  மராத்தா இட ஒதுக்கீடு பிரச்சினையில் மீண்டும் 50% பல்லவியை பாடியுள்ளதே உச்சநீதிமன்றம். 69% விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து வருமா?

- ஸ்டீபன், பட்டாபிராம்.

பதில்: 69% ஆபத்து வராது! - அதற்கென தனிக்கவசம் இரும்புக் கவசம் உள்ளது! 9ஆம் அட்டவணை பாதுகாப்பு - அதையும் தாண்டி, தமிழ்நாட்டில் விழிப்புணர்வு என்ற பெரிய பாதுகாப்பு உள்ளது!

No comments:

Post a Comment