பழ வியாபாரம், நாட்டு மருந்து கடைகளை திறக்க அனுமதி

சென்னை, மே 12 பழ வியாபாரம் செய்யவும், நாட்டு மருந்து கடைகளை திறக்கவும் தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட உள்ள முழு ஊரடங்கை செயல்படுத்துவது குறித்து தொழில் மற்றும் வணிக சங்க அமைப்புகளுடன் கடந்த 9-5-2021 அன்று முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் தலைமையில் சென்னையில் கலந்தாலோசனை கூட்டம் நடந்தது.

இதில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் பின்வரும் தளர்வுகள் மற்றும் நடவடிக்கைகள் அறிவிக்கப்படுகின்றன.

பழ வியாபாரம் - நாட்டு மருந்து கடைகள்

காய்கறி, மலர்கள் விற்பனை செய்ய அளிக்கப்பட்ட அனுமதியை போன்று, அதே நிபந்தனைகளுடன் பழ வியாபாரமும் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்படு

கிறது. அனைத்து தொழில் நிறுவனங்கள் ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளில் பிற பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு ஒரு நாள் மட்டும் குறைந்த அளவிலான பணியாளர்களுடன் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த ஊரடங்கு காலத்தில் செயல்பட அனுமதிக்கப்பட்ட தொடர் உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற் சாலைகள் இயங்குவதில் ஏற்படும் சிக்கல்களுக்கு உதவும் வகையில் ஒரு சேவைமையம் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்படும். சென்னையில் உள்ள தொழில் வழிகாட்டி மைய அலுவலகத் தில் இந்த சேவை மய்யம் இயங்கும்.

இதற்கான தொலைபேசி எண்கள் 96771-07722, 99943-39191, 78239-28262, 96291-22906, 99629-93496, 99629-93497.

ஆங்கில மருந்து கடைகள் இயங்க அளிக்கப்பட்ட அனுமதியை போன்று அதே நிபந்தனைகளுடன், நாட்டு மருந்துக் கடை களும் இயங்கலாம் என்று அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image