'இந்து' ஏட்டிலிருந்து : கரோனாவில் சிக்கிக் கொண்ட இந்திய அரசு

சோனியா காந்தி

கோவிட் -19 தொற்று நோய் காரணமாக நாட்டில்  மாபெரும் சுகாதார நெருக்கடி ஏற்பட் டுள்ள நிலையில், நாடு முழுவதிலும் நோய்த்தடுப்பூசி போடுவது பற்றி மேனாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருந்த ஆலோசனைகளுக்கு மத்திய சுகா தார அமைச்சர் ஹர்ஷ் வர்தனின் நயமற்ற பதிலினால் தான் அதிர்ச்சி அடைந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி கூறுகிறார். ஒரு தேசிய நெருக்கடியில் அரசியல் கருத்தொற்றுமை எட்டுவதும்,  தங்களுக்குத் தெரி யாததைக் கற்றுக் கொள்ளும் ஆற்றலும் தேவைப் படுவதாகக் கூறும் அவர், ஒருவருக்கே அனைத்தும் தெரியும் என்று சுய தம்பட்டம் அடித்துக் கொள்வது தேவையற்றது என்று  கூறுகிறார். 2021 ஏப்ரல் 30 அன்று தி ஹிந்து ஆங்கில நாளிதழில் வெளி வந்த அவரது பேட்டியின் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது.

கேள்வி:  அண்மைக் கால வரலாற்றில் ஏற்பட் டுள்ள பொது சுகாதார நெருக்கடியாக விளங்கும், மிகமிக மோசமானதாக இருக்கும் கோவிட் -19 தொற்று நோயின் இரண்டாவது அலை இந்தியாவை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது.  இது போன்ற தொரு வேகமான சீரழிவுக்கு யார் அல்லது எது காரணம் என்று நினைக்கிறீர்கள்?

பதில்:  உண்மையில், கட்சி வேறுபாடு இன்றி, அனைத்து மக்களும் அரசும் ஒன்றிணைந்து மேற் கொள்ள வேண்டிய மிகப் பெரிய பணிதான் கோவிட் -19 தொற்று நோய்க்கு எதிரான போராட்டம்  என்று நான் கருதுகிறேன். அடிப்படைத் தேவைகள் தேவையாக உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு அனைத்து வகையான உதவிகளை யும் திரட்டி அளிப்பதில் நாம் அனை வரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டிய தேவை இருக்கிறது. எவ் வளவு விரைவில் இயலுமோ அவ் வளவு விரைவில் அனைத்து மக்க ளுக்கும் தடுப்பூசி போடப்படுவதை நாம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் ஒன்றை நான் தெரிவித்துக் கொள்கிறேன். கோவிட் -19 தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற்று விட்டோம் என்று தவறுதலாக  அறிவித்துவிட்டு அதனை சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு கொண்டாடவும் செய்தது. நம் முகத்தில் அறைந்து கொண்டிருந்த உண்மைகளைக் கவனிக்க நாம் தவறிவிட்டோம். கோவிட் -19 தொற்று நோயின் இரண்டாவது அலை தாக்குதல் வரக்கூடும் என்பதால் நாம் அதனை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்ற நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையும் பின்பற்றப்படாமல் அலட்சியப்படுத்தப் பட்டது. மற்ற நாடுகளில் நிலவும் சூழ்நிலைகளை வைத்துப் பார்க்கும்போது, இந்தியாவில் என்ன நடக்கக் கூடும் என்று இந்தியா மற்றும் அயல்நாடுகளில் இருந்த பொதுசுகாதார வல்லுநர்கள் இந்த ஆண்டு பிப்ரவரி மாத தொடக்கத்தில் எச்சரித்திருந்தனர். ஆனால் நாமோ, தற்பெருமை அடித்துக் கொள்வது மற்றும் மெத்தனமாக இருப்பது என்ற வலையில்  சிக்கிக் கொண்டிருந்தோம். கோடிக்கணக்கான மக்களின் மீது ஏற்படக்கூடிய பாதிப்பைப் பற்றியோ, அவர்களது நலன்களைப் பற்றியோ சிறிதும் சிந்தனை செய்யாமல் இந்நோயை எளிதில் வேகமாகப் பரப்பக்கூடிய கும்பமேளா போன்ற திருவிழாக்கள் நடத்தப்படுவதற்கு அனுமதிக்கப் பட்டுள்ளது.

கேள்வி:  அரசைக் குறை கூறுவது மற்றும் எவர் மீதாவது பொறுப்பை சுமத்துவது என்பதற்கு மாறாக,, மக் களின் இன்னுயிரைக் காப்பது மிகவும் முக்கியமான தென்று கருதப்படுவது பற்றிய தங்களது கருத்து என்ன?

பதில்:  அக்கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். இப்போது நம் முன் உள்ள முழுமையான ஒரே ஒரு இலக்கைக் கொண்ட செயல்திட்டம், நம் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதும், அவர்களது வலியையும் துன்பங் களையும் வேதனைகளையும்  தீர்ப்பதும்தான். அதற்காக தற்போது தட்டுப்பாடு நிலவி வரும் உயிர்க் காற்று, முக்கிய மருந்துகள், மருத்துவமனைகளின் படுக்கை வசதிகளை நாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் மேற்கொள்ளப் பட்டுள்ள அணுகுமுறையே அது தான். எங்களால் மக்களுக்கு எந்தெந்த வழிகளில் எல்லாம் உதவ முடியுமோ அந்தந்த வழிகளில் எல்லாம் நாங்கள் உதவி செய்து வருகிறோம். கள நிலையில் ஓர் அரசியல் அமைப்பாக நாங்கள் என்ன செய்து கொண் டிருக்கிறோம் என்பதற்கான பெருமையை பறை சாற்றிக் கொள்வதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

கடந்த சில வாரங்களில் சர்வதேச சமூகம் நமக்கு உதவி செய்வதற்கு முன் வந்துள்ளதற்கு நாம் மிகுந்த நன்றியுடையவர்களாக இருக்கிறோம் என்பதையும் இந்த இடத்தில் குறிப்பிட நான் விரும்புகிறேன்.

ஆனால், இதையும் கூட பிரதமரின் புகழ் பாடுவதற்கு ஏற்றபடி திருத்திக் கூறுவது மிகுந்த பரிதாபத்துக்கு உரிய செயலாகவே இருக்கிறது. உண் மையில், அரசின் திறமையின்மை, பரிவுணர்ச்சியோ கருணை உணர்ச்சியோ இல்லாமல் இருந்தது, முன் னுரிமை உணர்வை முழுவதுமாக திரித்துக் கூறுவது ஆகியவற்றை எதிரொலிப்பதாகவே இருப்பதாகும் அது. எடுத்துக் காட்டாக, மத்திய விஸ்டா மேம்பாட்டு திட்டம் போன்ற வீணான, தேவையற்ற  திட்டங்களை வேகமாக நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்ற நேரம் இதுதானா? என்று கேட்கத் தோன்றுகிறது. இதைக் கூறிய பிறகு, இந்தியாவில் உள்ள பல சமூக அமைப் புகளும்,  குழுக்களும், தனிப்பட்ட குடிமக்களும் தாங் களாக முன்வந்து இந்த நோயினால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நிவாரணம் அளித்து, உதவி செய்ததற்காக அவர்களை நான் பெரிதும் பாராட்டுகிறேன். பல்வித மான தடைகள், இடையூறுகள், துன்பங்கள், ஆபத்து களைப் பொருட்படுத்தாமல் பணியாற்றி வரும் நமது முன்னணி கள சுகாதாரப் பணியாளர்களின் துணிவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

கேள்வி:  அண்மையில் மேனாள் பிரதமர் மன்மோகன்சிங் தடுப்பூசி போடுவது பற்றி ஆறு யோசனைகளை தெரிவித்திருந்தார். ஆனால் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்த்தனிட மிருந்து அந்த ஆலோசனைகள் பயனற்றவை என்று தெரிவிக்கும் கடிதம் ஒன்று வந்தது.  நீங்களும் ராகுல் காந்தியும் கூட பிரதமருக்கு ஆலோசனை தெரிவித்து கடிதங்களை எழுதி வந்துள்ளீர்கள். இந்த கோவிட்-19 நோய் நெருக்கடியை காங்கிரஸ் கட்சி அரசியலாக் குகிறது என்றதொரு குற்றச் சாட்டும் இருக்கிறது.

பதில்:   தனது உயர் கல்வி மற்றும் அகண்ட அனுபவத்தின் அடிப்படையில், பிரதருக்கு மிகவும் உருக்கமான, கவுரமான, ஆக்கபூர்வமான கடிதம் ஒன்றை மன்மோகன்சிங் எழுதினார். அந்தக் கடிதம் தனக்குக் கிடைத்தது என்பதற்குக் கூட பிரதமர் ஒப்புதல் அளிக்கவில்லை. ஆனால், மன் மோகன்சிங் மீதும் காங்கிரஸ் கட்சி மீதும், மிகவும் அசாதாரண மானதும், தனிப் பட்ட முறையிலும், சிறிதும் நாகரிகம் அற்ற முறையிலும், நியாயமற்ற தாக்குதல் ஒன்றை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் மேற் கொண்டார். அவரது கடிதத்தைக் கண்டு உண்மையிலேயே நான் அதிர்ச்சி அடைந்து போனேன். அதைப் படித்துப் பார்க்கும் எவரும் அதிர்ச்சி அடையவே செய்வார்கள். காங்கிரஸ் கட்சி மேனாள் தலைவராக நான் பிரதமருக்கு நான் எண்ணற்ற நேரங்களில் கடிதம் எழுதி யுள்ளேன். அந்தக் கடிதங்களுக்கும் எந்த வித பொறுப்பான பதிலும் கிடைக்கவில்லை. கடந்த 14 மாதங்களில் கோவிட்-19 நோய் பற்றி சில ஆக்கப் பூர்வமான யோசனைகளை தெரிவித்து மட்டுமே நான் பிரதமருக்கு 10 கடிதங்கள் எழுதியுள்ளேன். கட்சிக் கூட்டங்களிலும், காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநில முதல்வர்களின் கூட்டங்களிலும், அவர்களின் தற்போதைய அனுபவத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட விவாதங்களின் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதுப் பற்றிய கருத்துகளை பகிர்ந்து கொள்வதாகத்தான் அந்த கடிதங்கள் இருந்தன என்பதை வலியுறுத்திக் கூற நான் விரும் புகிறேன். இந்த கோவிட்-19 நோய் நெருக்கடியை அரசியலாக்கும் ஒரு கேள்வி அல்ல இது. பொறுப்பு மிகுந்த, மக்கள் நலனில் அக்கறை கொண்டதொரு எதிர்கட்சியின் கடமைகளை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம்.

(தொடரும்)

நன்றி: 'தி இந்து' 30-04-2021

                                தமிழில்: .. பாலகிருட்டிணன்

Comments
Popular posts
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
50% தடுப்பூசிகளை அபகரித்த 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள்
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image