கழக தலைமைச் செயற்குழு ஒரு பார்வை "திராவிடம் வெல்லும்!" - தமிழர் தலைவர் "நான் திராவிட மரபைச் சார்ந்தவன்" - முதல் அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின்

 கவிஞர் கலி.பூங்குன்றன்


மிகச் சிறப்பாக நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சில முக்கிய கருத்துகளை எடுத்துக் கூறினார். இனி காணொலி மூலம் உங்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு அதிகம் கிட்டும்.

இந்தக் கூட்டத்தில் ஏராளமான தோழர்கள் பேசியிருக்கிறீர்கள். நான் பேசுவதைவிட நீங்கள் பேசுவது தான் முக்கியமானது.

இங்கே நாம் கலந்துறவாடுவது நம்மை பேட்டரிரீ சார்ஜ்' செய்து கொள்வது போலத்தான், அதே நேரத்தில் கரோனாவால் அரிய தோழர்கள் பலரை நாம் இழந் திருக்கிறோம். கரோனா சவால் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மக்கள் இயக்கமாக ஒருங்கிணைந்து இந்தச் சவாலை சந்திப்போம்!

நடந்து முடிந்த தேர்தலில் திராவிடத்துக்கு முழு வெற்றி கிடைத்துள்ளது. ஒரே ஒரு பார்ப்பனர் கூட இல்லாத சட்டமன்றம் இது.

லெஜிஸ்லேட்டிவ் அசெம்பளி' என்றால் ஒரு காலத்தில் பார்ப்பனர் மயமாகவே இருந்தது. இன்று நிலைமை என்ன? கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கூட இரண்டு பார்ப்பனர்கள் இடம் பெற்றனர். இந்தச் சட்டசபையிலே பெயர் சொல்லுவதற்கு ஒரே ஒரு பார்ப்பனர் கூட இல்லை.

திமுக வரக்கூடாது என்று எப்படியெல்லாம் ஆட்டம் போட்டார்கள் - மத்திய ஆட்சியினர் அதிகாரத் துரைத் தனம் நடத்தினார்கள்.

இது பெரியார் நாடா? திராவிட மண்ணா?" என்று எல்லாம் பார்ப்பன ஏடுகள் கேலியும், கிண்டலும் நிறைந்த கேள்விகளைக் கேட்டனர் - கார்ட்டூன்களைப் போட்டனர்.

தந்தை பெரியார் சிலைகளை அவமதித்தனர் - காவி உடை அணிவித்தனர் - திருவள்ளுவர், அண்ணா, அம்பேத்கர் சிலைகளையும் சிறுமைப்படுத்தினர்.

இதையெல்லாம் செய்தவர்கள் யார்? தூண்டியவர்கள் யார்? காவி உடைகளைப் பெரியாருக்கு அணிவித்துப் பெருமை சேர்த்தனர் என்று திமிர் தண்டமாக எழுதிய கோயங்கா வீட்டுக் கணக்கப் பிள்ளைகள் உண்டு.

எல்லாவற்றிற்கும் சேர்த்துத்தான் ஒட்டுமொத்தமாகப் பார்ப்பனர்கள் பூண்டே இல்லை என்ற அளவுக்குத் துடைத்து எறிந்து விட்டனர் தந்தை பெரியார் பூமியான தமிழ்நாட்டு மக்கள்!

ஒரு தாழ்த்தப்பட்ட சகோதரரை பா...வின் தமிழ் மாநிலத் தலைவராக்கி வேடம் கட்டிப் பார்த்தனர்!

அவர் கையிலே வேலைக் கொடுத்து வேல் யாத்திரை நடத்தச் சொல்லி, இது பெரியார் மண்ணல்ல - ஆழ்வார் மண் - நாயன்மார்கள் மண் என்று எல்லாம் எழுதிப் பார்த்தனர்.  எண்ணெய்க்குக் கேடே தவிர, பிள்ளைப் பிழைத்த பாடில்லை என்பதுதான் நிகர உண்மையாயிற்று.

1971 தேர்தலில் ராமனைக் காட்டி, 2019 மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணனைக் காட்டி நடந்து முடிந்த தேர்தலில் வேல் - முருகனைக் காட்டி - கடைசியில் மண் கவ்வியதுதான் மிச்சம்.

இதற்குப் பிறகாவது பார்ப்பனர்கள் புத்தி கொள்முதல் பெறுவார்களா என்றால், ஜென்மத்தில் பிறந்தது எது கொண்டுஅடித்தாலும்' அவர்கள் திருந்தப் போவதில்லை.

"திராவிடம் வெல்லும்" என்ற தமிழர் தலைவரின் இரு சொல் முழக்கம் வீரியமாக சிகரத்தின் உச்சியில் நின்று வெற்றிப் புன்னகையை உமிழ்கிறது.

இதன் பொருள் - இனமானம், தன்மானம், மொழி மானம், பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்கும் பெரும் போர், சமூக நீதி, பாலியல் நீதி, சமதர்மம், சமத்துவம், ஜாதி ஒழிப்பு, பகுத்தறிவுக் கொள்கைகள், பார்ப்பனர் அல்லாதார் எழுச்சி என்ற மகரந்தங்களை உள்கொண்ட சூல் ஆகும்.

திராவிடம் என்று சூளுரைத்தோம் - வெற்றி பெற்றோம். திராவிடம் வெல்லும் என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்கும் மண்ணின் மணம் மட்டுமல்ல - எங்கெங்கெல்லாம். ஒடுக்கு முறை கோலோச்சுகிறதோ அங்கெல்லாம் தேவைப்படும் மகத்தான அருமருந்தான தத்துவம்.

ஹிந்து ராஜ்ஜியமாக குரல் எங்கெங்கெல்லாம் கேட்கிறதோ, பாசிசப் பாய்ச்சல் எங்கெல்லாம் அத்து மீறுகிறதோ, அங்கெல்லாம் தேவைப்படும் தந்தை பெரியாரின் தத்துவத்துக்குப் பெயர்தான் திராவிடம்.

மதவாத பா... சங்பரிவார் பாசிச மூளைக்காய்ச்சல் நோய்க்குத் தேவையானது தந்தை பெரியாரின் இந்த திராவிடத் தத்துவம்.

"திராவிடம் வெல்லும்" என்று தேர்தலுக்கு முன்பு தமிழர் தலைவர் முழக்கமிட்டார். தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற தளபதி மு..ஸ்டாலின் "நான் திராவிட மரபைச் சார்ந்தவன்!" என்று அறிவித்து விட்டார்.

தமிழர் தலைவரின் முழக்கம் - தளபதியாரின் அறிவிப்பு - இந்தப் புவியிர்ப்புத் தத்துவம் எத்தகையது என்பது - இதுவரை புரியாதவர்களுக்கும் புரிந்திருக்கும். புரிந்து கொண்டால் புத்திசாலித்தனம்.

ஆங்கிலத்தில் "திராவிடன் மாடல்" என்ற பெயரில் ஓர் ஆய்வு நூல் வெளிவந்துள்ளது.

திராவிடத் தத்துவம் இந்தியாவுக்கே முன் மாதிரியா னது என்று விளக்கும் நூல் இது - எழுதியவர்கள் நம் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு ஆய்வு செய்து எழுதப்பட்ட நூல் (950 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்நூல் ரூபாய் 800க்கு சென்னை பெரியார் திடல் புத்தக விற்பனை நிலையத்தில் கிடைக்கும் என்று அறிவிப்பினையும் செய்தார் கழகத் தலைவர்).

குஜராத் மாடல்', ‘குஜராத் மாடல்' என்று ஒன்றைக் கிளப்பி விட்டார்கள். அதற்கு எல்லாவற்றிலும் வீழ்ச்சி அந்த மாநிலம் என்று வேண்டுமானால் பொருள் கொள் ளலாம்.

குஜராத் மாடல்', ‘குஜராத் மாடல்' என்கிறார்களே, அது என்ன தெரியுமா? மீசை வைத்தற்காகத் தாழ்த்தப்பட்ட, இளைஞர் தாக்கப்படுகிறார். கடந்த 25 ஆண்டுகளாக அம்மாநிலத்தில் பா... ஆண்டாலும்  புதிய மருத்துவமனையோ, மருத்துவக் கல்லூரியோ திறக்கப்படவில்லை. 14 மாவட்டங்களில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைகளில் சிடி ஸ்கேன் வசதி அறவே கிடையாது. கிராமங்களில் நாள் ஒன்றுக்கு 40 விழுக்காடு மக்கள் ரூ.40க்குள்ளும், 90 விழுக்காடு மக்கள் ரூ.75க்குள் தான் செலவு செய்யக் கூடிய பரிதாபப் பொருளாதார நிலை! குஜராத்தில் மாதாந்திர தனிநபர் வருமானம் ரூ.2472, இது அனைத்திந்திய சராசரி வருவாய் ரூ.2477க்கும் கீழ்தான். முதல் வகுப்பிலிருந்து 10ஆம் வகுப்புக்குள் இடை நிற்போர் (ஞிக்ஷீஷீஜீ ஷீuts) 58 விழுக்காடு. சீனாவில் ஹாங்காங்கில் உள்ள மிகப் பெரிய பேருந்து நிலையத்தை குஜராத், அகமதாபாத் பேருந்து நிலையம் என்று காட்டி விளம்பரம் செய்ததுதான் குஜராத் மாடல். தமிழ்நாடோ திராவிட மாடல். இந்திய அளவில் பட்டொளி வீசிப் பறந்து கொண்டுள்ளது.

இந்தியாவில் உயர்கல்வியில் தமிழ்நாடு இப்பொழுதே 49 விழுக்காடு இடங்களை எட்டிவிட்டது. 2035ஆம் ஆண்டு வாக்கில் 50 சதவிகிதத்தை எட்டப் போவதாக புதிய கல்விக் கொள்கை கூறியிருப்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் "திராவிட மாடலின்" அருமை விளங்கும்.

மருத்துவத் துறையை எடுத்துக் கொண்டால் குஜராத் தில் 17 அரசு மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டிலோ 25 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மருத்துவர் மக்கள் தொகை எண்ணிக்கையில் தமிழ்நாடு முன்னணி யில் உள்ளது.

1 : 253 ஆக உள்ளது.

1368 ஆரம்ப சுகாதார நிலையங்கள் (PHC) தமிழ் நாட்டில் தான் உள்ளன.

1368 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1006 நிலையங் களில் (73.5%) 2 மருத்துவர்கள்; 995 நிலையங்களில் (72.7%) பெண் மருத்துவர்களைக் கொண்டும் இயங்குகிறது.

குஜராத்திலோ ஆரம்ப சுகாதார நிலையங்களில் 3 மருத்துவர்களைக் கொண்டவை மூன்று மட்டுமே! 4 மருத்துவர்களைக் கொணடவை ஏதுமில்லை. ஆனால் தமிழ்நாட்டில் 3 + மற்றும் 4 + மருத்துவர்கள் கொண்டவை 72, மற்றும் 162 சுகாதார நிலையங்கள். மருத்துவர்களே இல்லாமல் குஜராத்தில் 107 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்குகின்றன. தமிழ்நாட்டில் பொது மருத்துவமனை களில் 8724 ஆகவும் குஜராத்தில் பொது மருத்துவமனை களில் 3058 ஆகவும் மட்டுமே படுக்கைகள் உள்ளன.

குஜராத் மாடல் என்பது என்ன?

தமிழ்நாட்டில்திராவிட மாடல்' என்பது என்ன என்று இப்பொழுது புரிகிறதா?

கழகப் பொருளாளர் தோழர் வீ.குமரேசன் ஒன்றைக் குறிப்பிட்டார்.

மகாராட்டிர மாநிலத்தில் மராத்தா பிரிவு மக்களுக்கு 16 விழுக்காடு ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் சில நாட்களுக்கு முன் வழங்கிய தீர்ப்பைக் குறித்ததாகும். அது  - உச்சநீதிமன்றத்தில் அய்ந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பு சமூக நிதிக்கு ஆழக் குழி வெட்டுவதாகும். போராடிப் பேராடிப் பெற்ற இடஒதுக் கீட்டை, ஒரு பேனா முனையால் படுகொலை செய்யும் போக்கினைக் கழகத் தலைவர் விவரித்தார் (10.5.2021 'விடுதலை' அறிக்கையைக் காண்க).

சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் என்கின்ற இடஒதுக்கீட்டுக்கான அளவு கோள், இத்தீர்ப்பின் மூலம் பின் தள்ளப்படுகிறது. ஏற்கெனவே பொருளாதார அடிப்படையில் உயர்ஜாதி ஏழை என்ற பெயரால் கதவு திறக்கப்பட்டு விட்டது.

நீதி நெறி தவறாது ஆட்சி புரிந்த மாவலி சக்ரவர்த் தியை விஷ்ணு வாமன அவதாரம் எடுத்து (குள்ளப் பார்ப்பான்) மூன்றடி மண் கேட்டு, ஓர் அடி பூமி, மற்றொரு அடி ஆகாயம், மூன்றாம் அடி வாமன சக்ரவர்த்தியின் தலையில் வைத்து, கொன்ற பார்ப்பன சதியைப் போகிற போக்கில் கழகத் தலைவர் கோடிட்டுக் காட்டியது மிகவும் அருமை.

பிறப்படுத்தப்பட்டவர்கள் யார் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் மாநில அரசுகளுக்குக் கிடையாதாம் - அது மத்திய அரசைச் சார்ந்ததாம் - என்ன கொடுமை இது!

மத்திய அரசுக்கென்று மக்கள் உண்டா? மாநில அரசுக்குத்தான் மக்கள் உண்டு. ஒரு மாநிலத்தில் பிறபடுத்தப்பட்டவர்கள் யார் என்று அம்மக்களோடு பின்னிப் பிணைந்த மாநில அரசுக்குத் தெரியுமா? டில்லி வாலாக்களுக்குத் தெரியுமா?

மாநிலங்களின் உரிமைகள் மீது கோடரியை வீசி, கொஞ்சம் கொஞ்சமாக பலகீனப்படுத்தி - ஒரே இந்தியா என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் நோக்கத்தை - அவர்களுக்கே உரித்தான கொல்லைப் புற வழியாகச் செயல்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.

மண்டல் குழு பரிந்துரை செயலாக்கத்திற்குப் பின் கடந்த 29 ஆண்டுகளில் மத்திய அரசுத் துறைகளில் நுழைந்தவர்கள் மத்திய அரசின் இணைச் செயலாளர்கள், செயலாளர்கள் என்கிற கட்டத்துக்கு நகரும் இந்தக் காலகட்டத்தில் பார்ப்பன நயவஞ்சக பா... அரசு என்ன செய்தது தெரியுமா?

தனியார்த் துறைகளில் பணியாற்றியவர்களையும் அரசுத் துறைகளில் ஈர்த்துக் கொள்ளலாம்(Lateral Entry)  என்ற ஒரு முறையைக் கொண்டு வந்து, மண் டலுக்குப் பின் அதிகாரத்திற்குள் நுழைந்தவர்களுக்கான உயர் பதவி இடங்களைக் கபளீகரம் செய்துவிட்டனர். ஒரு கட்டத்துக்கு மேல் பிற்படுத்தப்பட்டவர்கள் உயர் நிலையை அடையக் கூடாது என்கிற பார்ப்பனப் பெரும் சூழ்ச்சியைப் பார்த்தீர்களா? (யாரையோ குற்றப் பரம் பரையினர்  என்று பழி சுமத்தினார்களே, உண்மையில் குற்றப் பரம்பரையினர் யார் என்பது இப்பொழுது புரிந்திருக்குமே!)

பார்ப்பன சக்திகளின் கடும் எதிர்ப்பையும் புறங்கண்டு மிகப் பெரிய வெற்றிச் சிகரத்தில் திமுகவும் - அதன் கூட்டணியும் ஜொலிக்கின்றன. இதனை நாணயமாக ஏற்றுக் கொண்டு வாழ்த்துக் கூறும் நாகரீகம்கூட அவாளிடத்தில் இல்லை - அவர்களிடத்தில் இதனை எதிர்பார்க்கவும் முடியாது.

ஆனாலும் நமது ஆட்சி அரியணையில் ஏறிவிட்டதே என்று திருப்தி பட்டுவிடவும் முடியாது. கண்ணை இமை காப்பது போல் தாய் நிலையிலிருந்து, வாளும் கேடயமாக இந்த ஆட்சியைப் பாதுகாக்கும் பொறுப்பு திராவிடர் கழகத்திற்கு இருக்கிறது.

நம் மக்கள் வளர்வது கண்டு, வெற்றி பெறுவது கண்டு தாய்ப் பறவையாக இருந்து ரசிக்கக் கூடியவர்கள் நாம்.

தன் குஞ்சைக் கொல்ல வரும் வான் பருந்தை விரட்டியடிக்கும் தாய்க்கோழி நாம்.

நாம் ரப்பர் மரம். ரணங்கள் வரத்தான் செய்யும் - ரப்பர் மரங்களை வெட்டிப் பயன்படுத்திக் கொண்டுதான் இருப்பார்கள் - நமக்கு இது பழகிப்போன ஒன்றே!

இந்த நேரத்தில் நாம் ஒன்றைக் கவனித்துப் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார் கழகத் தலைவர். புதுச்சேரி மாநில அரசியலை எடுத்துக் காட்டினார்.

அங்கு என்ன நடந்தது? சட்டப்பேரவையில் ஓர் இடம் கூட இல்லாத பா... இந்தத் தேர்தலில் ஆறு இடங்கள் பெற்றது எப்படி? ஆட்சியில் பங்கு பெற்றது எப்படி? போட்டியிட்ட அத்தனை இடங்களிலும் அங்கு அஇஅதிமுக தோல்வி அடைந்தது எப்படி? அஇஅதி முகவை விட பா... புதுச்சேரி மாநிலத்தில் பெரிய கட்சியா? மக்கள் செல்வாக்குள்ள கட்சியா?

இதைத் தமிழ்நாட்டின் அஇஅதிமுக தலைவர்கள், கட்சியினர் நிதானமாக - ஆழமாக நினைத்துப் பார்க்க வேண்டும்; புதுச்சேரியில் ஒத்திகை பார்த்து குறுக்கு வழிகளை எல்லாம் கூச்ச நாச்சமின்றி (ஆனால் தார்மீகத்தைப் பற்றிப் பேசுவதில் மட்டும் குறைச்சல் இருக்காது) கையாண்டு, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் தான் முதல் அமைச்சர் என்றாலும் தாங்கள்தான் ஆள்வதாக ஒரு பிம்பத்தை உருவாக்கிக் காட்டுவார்கள். போதும் போதாதற்கு மூன்று பா...வினரை நியமன உறுப்பினராக்கி விட்டனர்.

புதுச்சேரியைக் கண்ணெதிரே பார்த்த பிறகும் கூட தமிழக பா...வுக்கு புத்தி வரவில்லையென்றால் அதன் அகால மரணத்தை யாரும் தடுக்கவே முடியாது.

அஇஅதிமுகவையும் காப்பாற்ற வேண்டிய கடமை திராவிடத்துக்கு உண்டு, தி..வுக்கு உண்டு, திமுகவுக்கு உண்டு என்று தாய்க் கழகத்தின் தலைவரான நமது ஆசிரியர் தொடர்ந்து கூறி வந்ததை இந்த இடத்தில் கவனமாகக் கருதி நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியம்! முக்கியம்!!

தீர்மானங்கள் பற்றியெல்லாம் சுருக்கமாக விளக்கிய கழகத் தலைவர் சிறுகனூர் "பெரியார் உலகம்" பற்றியும் முக்கியமாகக் குறிப்பிட்டார்.

மத்திய அரசிடம் இருந்தும், மாநில அரசிடம் இருந் தும் பல அனுமதிகளைப் பெறும் திசையில், பெரும் பாலும் அனுமதிகள் கிடைத்த நிலையில் ...தி.மு.. அரசு முக்கிய கோப்பினைக் கிடப்பில் போட்டு, தம் ஆற்றாமையை வெளிப்படுத்திக் கொண்டுள்ளதையும் குறிப்பிட்டார்.

உதயசூரியன் உதிர்த்திருக்கிறது - விரைவில் விடிவு ஏற்பட்டு அடுத்த கட்டப் பணிகளை முறைப்படி தொடங்கி விரைந்து பணிகளை முடிப்போம்.

வாழ்க பெரியார், வெல்க திராவிடம் என்று கூறி முடித்தார் கழகத் தலைவர்.

ஆம் நடந்து முடிந்த தலைமைச் செயற்குழு கழக வரலாற்றில் ஜொலிக்கும் ஒரு மைல் கல்!

Comments
Popular posts
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image
50% தடுப்பூசிகளை அபகரித்த 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள்
Image