5 இடங்களில் ரெம்டெசிவிர் விற்பனை கூடுதலாக 12,500 ஆக்சிஜன் படுக்கை

சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை,மே10-தமிழகத்தில் கரோனா சிகிச்சைக்கு 12,500 ஆக்சிஜன் படுக்கைகள் விரை வில் பயன்பாட்டுக்கு வரவுள் ளன  என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் தெரிவித்தார்.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, அறநிலையத் துறை அமைச் சர் சேகர்பாபு, சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு, மருத்துவமனை டீன் பாலாஜி உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களி டம் அமைச்சர் மா.சுப்பிர மணியன் கூறியதாவது: இந்த மருத்துவமனையில் 1,500-க் கும் மேற்பட்ட, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிகிச்சை அளிக் கப்படுகிறது. அவர்களுக்கு தேவையான அனைத்து வச திகளும் செய்யப்பட்டு வரு கின்றன. கூடுதலாக 500 ஆக் சிஜன் படுக்கைகள் அமைக்கப் பட்டுள்ளன.

மு..ஸ்டாலின் முதல்வ ராக பொறுப்பேற்பதற்கு முன்பாகவே தொற்று பர வலை கட்டுப்படுத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தி தேவையான நடவடிக்கைகளை எடுத்துள் ளார். தொடர்ந்து ஆலோ சனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் வரும் 15ஆம் தேதிக்குள் 12,500 ஆக்சிஜன் படுக்கைகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. அடுத்தகட்ட மாக 12,500ஆக்சிஜன் படுக் கைகளை அமைக்க வேண்டு மென கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது. அதுவும் விரை வில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத் துவக் கல்லூரியில் ரெம்டெ சிவிர் மருந்து விற்பனை செய் யப்படுகிறது. தமிழகம் முழு வதும் இருந்து பொதுமக்கள் வந்து மருந்து வாங்கிச் செல் கின்றனர். பொதுமக்களின் சிரமத்தை அறிந்த முதல்வர், தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் மருந்து விற்பனையை தொடங்க அறிவுறுத்தியுள் ளார். இதையடுத்து மதுரை, திருச்சி, கோவை, சேலம், திருநெல்வேலி ஆகிய இடங் களில் மருந்து விற்பனை தொடங்க உள்ளது.

முழு ஊரடங்கு காலத்தில் தடுப்பூசி முகாம் செயல்படும். கரோனா தொற்று பரவலை தடுக்க வீடுவீடாகச் சென்று ஆய்வு செய்யும்பணி நடை பெறும். சித்த வைத்தியம் மற் றும் ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ சிகிச்சை களை கரோனா நோயாளிக ளுக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ கத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு வராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ் வாறு அவர் தெரிவித்தார்.

முழு ஊரடங்கு காலத்தில் தடுப்பூசி முகாம் செயல்படும். கரோனா தொற்று பரவலை தடுக்க வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்யும்பணி நடை பெறும்.

Comments