முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் உள்பட 34 தமிழ்நாடு அமைச்சர்கள் ஆளுநர் மாளிகையில் பதவியேற்றனர்!

சென்னை, மே 7  முதலமைச்சராக - தி.மு.. தலைவரும், கொளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினருமான தளபதி மு..ஸ்டாலின் உள்பட 34 அமைச்சர்கள் இன்று (7.5.2021) தமிழக ஆளுநர் மாளிகையில் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அமைச்சர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். உறுப்பினர்கள் அனைவரும் ''உளமாற'' என்று கூறி உறுதிமொழி ஏற்றனர்.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 இல் தி.மு.. கூட்டணி 159 இடங்களில் மகத்தான வெற்றி பெற்றது. 125 இடங்களில் வென்ற தி.மு.. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.

முன்னதாக தி.மு.. சார்பில் வெற்றி பெற்ற சட்ட மன்ற உறுப்பினர்களின் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் 4.5.2021 அன்று நடை பெற்றது. அதில், தி.மு.. சட்டப்பேரவை கட்சித் தலைவராக தளபதி மு..ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந் தெடுக்கப்பட்டார். தி.மு..வின் 125 சட்டமன்ற உறுப்பினர்களும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற .தி.மு.. (4), மனிதநேய மக்கள் கட்சி (2), கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி (1), தமிழக வாழ்வுரிமைக் கட்சி (1) ஆகிய கட்சிகளின் 8 சட்டமன்ற உறுப்பினர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக தளபதி மு..ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, 5.5.2021 அன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து தளபதி மு..ஸ்டாலின் ஆட்சியமைக்க உரிமை கோரினார். அன்று மாலையே ஆட்சி அமைக்க வருமாறு மு..ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

அதன்படி, புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா இன்று (7.5.2021) காலை 9 மணிக்கு ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள திறந்தவெளி அரங்கில் எளிமையாக நடந்தது.

இவ்விழாவில் தமிழகத்தின் 23 ஆவது முதலமைச்சராக தளபதி மு..ஸ்டாலின் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து புதிய அமைச்சர்களும் பதவியேற்றனர்.

இவ்விழாவில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ், மேனாள் துணை முதலமைச்சர் .பி.பன்னீர் செல்வம், காங்கிரஸ் கட்சித் தமிழகத் தலைவர் கே.எஸ்.அழகிரி, .தி.மு.. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்  கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் தளபதி மு..ஸ்டாலின் குடும்பத்தினர், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட தி.மு.. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இவ்விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.

பதவியேற்ற அமைச்சர்கள் விவரம் வருமாறு:

மு..ஸ்டாலின் - முதலமைச்சர் - பொது, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி மற்றும் அகில இந்திய பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, சிறப்பு முயற்சி, சிறப்புத் திட்ட செயலாக்கம், மாற்றுத் திறனாளிகள் நலன்.

துரைமுருகன் - நீர்வளத்துறை அமைச்சர் - சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டம், மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்.

கே.என்.நேரு - நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் - நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல்.

.பெரியசாமி - கூட்டுறவுத் துறை அமைச்சர் - கூட்டுறவு, புள்ளியியல் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலன்.

.பொன்முடி - உயர் கல்வித்துறை அமைச்சர் - உயர் கல்வி உள்ளிட்ட தொழில்கல்வி, மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல்.

..வேலு - பொதுப்பணித்துறை அமைச்சர்- பொதுப் பணிகள், (கட்டடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்).

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் - வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் - வேளாண்மை, வேளாண்மை பொறி யியல், வேளாண் பணிக்கூட்டுறவு சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத்தீர்வை, கரும்புப் பயிர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு.

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் - வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் - வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள், பேரிடர் மேலாண்மை.

தங்கம் தென்னரசு - தொழில்துறை அமைச்சர் - தொழில் துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் பல தமிழ் பண்பாட்டுத்துறை, தொல்பொருள்.

எஸ்.ரகுபதி - சட்டத் துறை அமைச்சர் - சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம்.

சு.முத்துசாமி - வீட்டு வசதித்துறை அமைச்சர் - வீட்டு வசதி, ஊரக வீட்டு வசதி, நகரமைப்புத் திட்டமிடல் மற்றும் வீட்டு வசதி மேம்பாடு, இடவசதி கட்டுப்பாடு, நகரத் திட்டமிடல் நகர் பகுதி வளர்ச்சி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்.

கே.ஆர்.பெரியகருப்பன் - ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் - ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரக கடன்கள்.

தா.மோ.அன்பரசன் - ஊரகத் தொழில்துறை அமைச்சர் - ஊரகத் தொழில்கள், குடிசைத் தொழில்கள் உள்பட சிறு தொழில்கள், குடிசை மாற்று வாரியம்.

மு.பெ.சாமிநாதன் - செய்தித்துறை அமைச்சர் - செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில் நுட்பவியல் மற்றும் திரைப்படச் சட்டம், பத்திரிகை, அச்சுக் காகிதக் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம்.

பி.கீதா ஜீவன் - சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் - மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூகநலம், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மற்றும் இரவலர் காப்பு இல்லங்கள் மற்றும் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவுத் திட்டம்.

அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் - மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் - மீன்வளம் மற்றும் மீன் வளர்ச்சிக் கழகம் கால்நடை பராமரிப்பு.

ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் - போக்குவரத்துத்துறை அமைச்சர் - போக்குவரத்து, நாட்டுடமையாக்கப்பட்ட போக்கு வரத்து மற்றும் இயக்கூர்தி சட்டம்.

கா.ராமச்சந்திரன் - வனத்துறை அமைச்சர் - வனம்.

அர.சக்கரபாணி - உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் - உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலைக்கட்டுப்பாடு.

வி.செந்தில்பாலாஜி - மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் - மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்றுக் கசண்டு (மொலாசஸ்).

ஆர்.காந்தி - கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் - கைத்தறி மற்றும் துணிநூல், கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், பூதானம் மற்றும் கிராம தானம்.

மா.சுப்பிரமணியன் - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் - மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன்.

பி.மூர்த்தி - வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்- வணிகவரி, பதிவு மற்றும் முத்திரைத் தாள் சட்டம், எடைகள் மற்றும் அளவைகள், கடன் கொடுத்தல் குறித்த சட்டம் உள்ளிட்ட கடன் நிவாரணம், சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு.

எஸ்.எஸ்.சிவசங்கர் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் - பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் நலன் மற்றும் சீர் மரபினர் நலன்.

பி.கே.சேகர்பாபு - இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் - இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள்.

பழனிவேல் தியாகராஜன் - நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை - நிதித்துறை, திட்டம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தம், அரசு ஊழியர்களின் ஓய்வூதிய மற்றும் ஓய்வூதியச் சலுகைகள்.

சா.மு.நாசர் - பால்வளத் துறை அமைச்சர் - பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சி.

செஞ்சி கே.எஸ்.மஸ்தான் - சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் - சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலன், அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் வக்பு வாரியம்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் - பள்ளிக்கல்வி.

சிவ.வீ.மெய்யநாதன் - சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் - சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை.

சி.வி.கணேசன் - தொழிலாளர் நலன், திறன் மேம் பாட்டுத்துறை அமைச்சர் - தொழிலாளர் நலன், மக்கள் தொகை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நகரம் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு.

.மனோ தங்கராஜ் - தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் - தகவல் தொழில்நுட்பத் துறை.

மா.மதிவேந்தன் - சுற்றுலாத்துறை அமைச்சர் - சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம்.

என்.கயல்விழி செல்வராஜ் - ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் - ஆதிதிராவிடர் நலன், மலைவாழ் பழங்குடியினர்கள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன்.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image