அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் நோக்கில் 25 மாணவர்கள் - 25 நாட்கள் பெரியாரியல் பயிற்சி வகுப்பு

 மூன்றாம் ஆண்டு தொடங்கி வைத்து கழக பொதுச் செயலாளர் ஜெயக்குமார் உரை

தஞ்சாவூர், மே 8 திராவிடர் கழக இளைஞரணி மற்றும் தஞ்சை நா.பூபதி நினைவு பெரியார் படிப்பகம் இணைந்து நடத்தும் "25 மாணவர்கள் - 25 நாட்கள் பெரியாரியல் பயிற்சி வகுப்பு" தொடக்க விழா 05.05.2021 அன்று மாலை 5 மணிக்கு இணையவழியில் நடைபெற்றது.

தஞ்சை மண்டல இளைஞரணி செய லாளர் வே.ராஜவேல் வரவேற்புரையாற் றினார்.

திராவிடர் கழக மாநில இளைஞரணி செயலாளர்   .சீ.இளந்திரையன்  தலைமை யேற்று உரையாற்றினார்.

மண்டலத் தலைவர்  மு.அய்யனார், மாவட்ட தலைவர்   சி.அமர்சிங், மாவட்டச் செயலாளர் .அருணகிரி, மாநில இளைஞர் அணி துணை செயலாளர்  இரா.வெற்றிகுமார், தஞ்சை மாவட்ட இளைஞர் அணி தலைவர்  ரெ.சுப்பிரமணியன் முன்னிலை ஏற்று உரை நிகழ்த்தினர். மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் கோபு பழனிவேல்  கருத்துரை யாற்றினார்.

பயிற்சி வகுப்பில் கழக பொதுச் செய லாளர் ஜெயக்குமார் ஆற்றிய உரை வருமாறு:

 "பெரியாரியல் என்பது வாழ்வியல் தத் துவம்,  சமூக முன்னேற்ற தடையை உடைப் பது, மனிதநேயப் பண்புகளை, அறிவியல் மனப்பான்மையை மாணவர்களிடையே வளர்ப்பதற்காக தான்.  இந்த பணியை தொடர்ந்து 3 ஆண்டுகளாக மேற்கொண்டு வருபவர், கல்லூரிப் பேராசிரி யராக,  பெரியார் கொள்கை களை மாணவர் களிடையே கொண்டு செல்பவராக  பேராசிரியர் வடுவூர் .எழிலரசன் அவர்கள் இங்கு உரையாற்றும் போது பெரியார் கொள்கை எவ்வளவு சிறந்தது என்பதற்கு தன்னுடைய வாழ் வையே உதாரணமாக கூறினார். இந்த பெரியாரியல் பயிற்சி வகுப்பெடுக்கக்கூடிய பேராசிரியர் ராஜேந்திரன் மிகவும் எதார்த்த மாக வகுப்பை கொண்டு செல்வதில் திறமை மிக்கவர். திரைப்படங்களில் எவ்வாறு நகைச்சுவையோடு சிறந்த கருத்துகளையும் எடுத்துக் கூறுவார்களோ அதுபோல் பெரியாரின் கருத்துக்களை நகைச்சுவை உணர்வோடு மாணவர்களிடையே வகுப்பெடுப்பவர்.

மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் முதலில் இந்த கொள்கையை புரிய வைக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த பெரியாரியல் பயிற்சி வகுப்பு. பெரியாரை உலகம் இன்றைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய மிக உயரிய சிந்தனையை அவரால் தர முடிந்தது. அவர் வாழ்ந்த காலத்தில் நிலவிய சமூக சூழ்நிலைகளில் இருந்து கற்றுக் கொண்டவர் தான் தந்தை பெரியார். கைபர் போலன் கணவாய் வழியாக வந்தவர்கள் தான் ஆரியர்கள் என்று படித்திருப்போம். அந்த ஆரியர்கள் என சொல்லப்படும் பார்ப்பனர்கள் தான் அனைத்திலும் உயர்ந்தவர்கள் என்றும் அனைத்து உயர் பதவிகளிலும், கல்வி கற்பதிலும் பார்ப்பனர் களே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இந்த கடவுள், ஜாதி, மதம் இவைகளை உரு வாக்கியது பார்ப்பனியமே, அந்த பார்ப்ப னியம் தான் சூத்திரன் படிக்கக் கூடாது என்றது பார்ப்பான் படிப்பதை சூத்திரன் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்றது இப்படி இருந்த ஜாதி ஏற்றத்தாழ்வை உடைக்க தோன்றிய இயக்கம்தான் திராவிடர் கழகம். தந்தை பெரியாருக்குப் பிறகு தான் அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கப்பெற்றது.

இந்த சமூகத்தின் வரலாற்றை நீங்கள் தெரிந்து கொள்வதற்காக. தந்தை பெரியா ரைப் பற்றி அவரின் கருத்துக்களை கொள் கைகளைப் பற்றி படிப்பது பெரியாருக்காக அல்ல, நமக்காக, இந்த சமுதாய முன் னேற்றத்திற்காக, நாம் நம்மை செழுமைப் படுத்திக் கொள்வதற்காகத்தான்.  நம்மு டைய முன்னோர்கள் பெற்றோர்கள் என்று யார் சொல்லி இருந்தாலும் அதை நம்பாதே உன் அறிவு கொண்டு சிந்திப்பது தான் பெரியாரியல் பெரியார் பயிற்சி என்பது அறிவை விரிவு செய்வதற்காகத்தான், இங்கே வகுப்பு எடுக்கக்கூடிய நம்முடைய வடுவூர் எழிலரசன் மற்றும் ராஜேந்திரன் ஆகிய இரு பேராசிரியர்கள் மாணவர்களால் கொண்டாடப்படும் பேராசிரியர்கள். எப்படி என்றால், தன்னிடம் படிக்கும் மாணவர்கள் படிக்கும் போதும், படிப்புக் காலம் முடித்து வெளியில் சென்ற பிறகும் அந்த மாண வர்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களின் தனிப்பட்ட வாழ்விலும் முன்னேறவேண்டி எண்ணற்ற உதவிகளை ஆலோசனைகளை தொடர்ந்து வழங்க கூடியவர்கள். அதனால்தான் பெரியாரின் கருத்தை ஏற்றுக் கொண்டு தாங்கள் வாழ்வில் முன்னேறியதைப்போல, நற் பண்புகளை அடைந்ததை போல தன்னிடம் படித்த மாணவர்களும் அந்த பலனை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக இந்த பெரியார் கருத்தை உங்களிடத்திலே வகுப்பெடுக்க இருக்கிறார்கள்.  பெரியாரின் கருத்தை ஏற்றுக் கொள்வதால் உங்களுக்கு நேரச்சிக்கனம், பொருளாதாரத்தில் சிக்க னம் போன்ற பல்வேறு பயன்கள் கிடைக்கப் பெறலாம்.  இந்த பயிற்சி வகுப்பு தொடர்ந்து நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்க கூடிய திராவிடர் கழக இளைஞரணி தோழர்களுக்கும் திராவிடர் கழக பொறுப் பாளர்களுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்என்று இந்தப் பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் அமெரிக்கா சோம. இளங்கோவன், மாநில பகுத்தறிவாளர் கழக தலைவர் மா. அழகிரிசாமி, ஆகியோர் கலந்துகொண்டு இந்த பயிற்சி வகுப்பு என்பது மிகச்சிறந்த பணி, மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறி உரையாற்றினர். புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ. வீரமணி இவ்விழாவினை காணொலி மூலம் ஒருங்கிணைத்து, உரையாற்றினார்.

தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளர் நா.வெங்கடேசன் நன்றியு ரையாற்றினார். இத்தொடக்கவிழா நிகழ் வில் ஒக்கநாடு பெரியார் நகர் உத்திராபதி, தஞ்சை மாநகர இளைஞரணி துணை தலைவர் பெரியார் செல்வம் மற்றும் இப் பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ள, தஞ்சாவூர் மன்னர் சரபோஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்வேள் உமாமகேசுவரனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குயின்ஸ் மகளிர் அறிவியல் மற்றும் கலை கல்லூரி, அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஜான் பிரிட்டோ கல்வியியல் கல்லூரி, சென்னை கிறிஸ்தவ கல்லூரி, ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி, திருச்சி சட்டக்கல்லூரி, தூய அந்தோனியார் மேல்நிலைப் பள்ளி, அக்சீலியம் பள்ளி, லிட்டில் ஸ்காலர் மேல்நிலைப்பள்ளி, சென்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, மன்னார்குடி சண்முகா மெட்ரிக் பள்ளி,வடுவூர் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளி கல்லூரிகளைச் சேர்ந்த புதிய மாணவர்கள், இளைஞர்களான பொமித்தா, கார்த்திகேயன், யுவனேஸ்வரன், பவித் திரன், ஜனனி, சுவேதா, சினேகா, அய்ஸ் வர்யா, ராகவி, துர்கா தேவி, வியானி விசுவா, செம்மொழிசெல்வன், நிவேதா, திராவிடச் செல்வன், துர்கா, நவீனா, அகல்யா, சுபசிறீ, கனிஷ்கா, அருள்மொழி, ஸ்டெல்லா மேரி, பாரதி தேவா, செல்வராணி, அகிலா, கலையரசி போன்ற 40க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறும் இந்த பெரியாரியல் பயிற்சி வகுப்பில் ஒவ் வொரு நாளும் ஒரு தலைப்பு என்கிற வகையில்

1.தொடக்க விழா

2. முடியாட்சி கால இந்தியா

3. மநுநீதி ஒருகுலத்திற்கு ஒரு நீதி

4.சுதந்திரப் போராட்டத்தின் உண்மை முகம்

5.நீதிக்கட்சி தோற்றம் பின்னணி

6.நீதிக்கட்சி ஆட்சியின் சமூகப் புரட்சி

7.தந்தை பெரியார் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள்

8. சுயமரியாதை இயக்கத் தோற்றம்

9. சமூக நீதி - ஒரு வரலாற்றுப் பார்வை

10. ஜாதி ஒழிப்பில் திராவிடர் கழகம்

11. பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள்

12.பகுத்தறிவும் மூட நம்பிக்கையும்

13. தமிழ் நாடகக்கலையின் பண்பாட்டுப் புரட்சி

14. தமிழிசை வளர்ச்சியில் திராவிடர் இயக்கத்தின் பங்கு

15. தமிழ் இலக்கியங்கள் திராவிடர் இயக்கத்திற்கு முன்னும் பின்னும்

16. தந்தை பெரியாரின் தமிழ்ப்பணி

17. சமூகப் புரட்சிப் பயணத்தில் அண் ணல் அம்பேத்கரும் அய்யா பெரியாரும்

18. திருவள்ளுவரின் ஆரிய தர்ம எதிர்ப்பு

19. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் என்னும் திராவிடக் கவி

20. பார்ப்பனியத்தின் பல்வேறு முகங்கள்

21. அன்னை மணியம்மையாரின் போர்க்குணம்

22. தந்தை பெரியாருக்கு பின் தமிழர் தலைவர் கி. வீரமணியின் செயல்பாடுகள்

23. சமூக வலைதளங்களில் நமது பங்களிப்பு

ஆகிய தலைப்புகளில் வகுப்புகள் நடைபெறும் வண்ணம் பாடத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி .அன்பழகன், தலைமை கழக பேச்சா ளர்கள் இரா.பெரியார் செல்வம், வழக்கு ரைஞர் பூவை. புலிகேசி, பெரியாரியல் பயிற்றுனர்கள் பேராசிரியர் வடுவூர் .எழிலரசன், பேராசிரியர் சு.இராஜேந்திரன், மாநில இளைஞரணி செயலாளர் .சீ.இளந் திரையன், மாநில மகளிர் பாசறை அமைப் பாளர் வழக்குரைஞர் செ.மே.மதிவதனி, மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் நூலகர் வே.இராஜவேல், தமிழ் பல்கலைகழக தமிழிசை ஆய்வு மாணவர் தினேஷ்குமார், தெ.வெற்றி செல்வன் ஆகியோர் வகுப்பெடுக்க இருக்கிறார்கள் இறுதியாக 24- ஆம் நாள் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு தேர்வும், 25- ஆம் நாள் பயிற்சி வகுப்பு நிறைவு விழாவும் நடைபெற்று  சான்றிதழும் வழங்கப்படவிருக்கிறது.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image