தமிழகம் முழுவதும் அரிசி அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக கரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் நாளை தொடக்கம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

 சென்னை, மே 9- தமிழகம் முழுவதும் அனைத்துஅரிசி குடும்ப அட்டைதாரர்களுக் கும் கரோனா நிவாரண உதவி முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட் டத்தை தலைமைச் செயலகத் தில் முதல்வர் மு..ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கி றார்.

கரோனா அச்சுறுத்தலால் மக்கள் படும் துன்பங்களைப் போக்க, அரிசி குடும்ப அட் டைதாரர்களுக்கு ரூ.4 ஆயி ரம் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் திமுக தலைவர் மு..ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அவர் முதல்வராகப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே இத்திட் டத்துக்கான கோப்பில் கையெழுத்திட்டார். இதற் கான அரசாணையும் உடனே பிறப்பிக்கப்பட்டது.

இத்திட்டத்தை முதல்வர் மு..ஸ்டாலின் நாளை (10.5.2021) தொடங்கி வைக் கிறார். இதுகுறித்து உணவுத் துறைஅமைச்சர் சக்கரபாணி சென்னை தலைமைச் செயல கத்தில் நேற்று (8.5.2021) கூறி யதாவது:

நாங்கள் ஆட்சிக்கு வந் தால், கரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணம் வழங் கப்படும் என்று தேர்தலின் போது வாக்குறுதி அளித் தோம். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலை மையில் தற்போது ஆய்வுக் கூட்டம் நடந்தது.

அதன்படி, 2 கோடியே 7 லட்சத்து 87 ஆயிரம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுத் துறை மூலமாக ரூ.4,153.39 கோடி செலவில் முதல் தவணையாக கரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இத் திட்டத்தை தலைமை செய லகத்தில் முதல்வர் ஸ்டாலின் 10ஆம் தேதி (நாளை) தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, மாவட்டந்தோறும் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைப்பார்கள்.

பிறகு, நியாயவிலை கடை களில் 10ஆம் தேதி முதல் தினமும் 200 குடும்ப அட்டை தாரர்களுக்கு டோக்கன் என்ற வகையில், சமூக இடை வெளியை பின்பற்றி காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரைரூ.2 ஆயிரம் இம்மாதத் திலேயே வழங்கப்படும்.

டோக்கனை நியாயவிலை கடை விற்பனையாளர்கள் வீடு, வீடாக சென்று வழங்கு வார்கள். அதில் குடும்ப அட் டைதாரர் பெயர், எந்த நியா யவிலை கடை, எந்த தேதி, நேரம் என்பன உள்ளிட்ட விவரங்கள்இடம்பெறும். குடும்ப அட்டையில் உள்ள வர்கள் யார் வேண்டுமானா லும் நியாயவிலை கடைக்கு சென்று, நிவாரணத் தொகையை பெறலாம்.

அரிசி குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு மட் டுமே இந்த நிவாரணம் வழங் கப்படும். சர்க்கரை அட்டை வைத்திருப்போருக்கு வழங் கப்படாது. யாரும் விடுபடா மல் அனைவருக்கும் நிவார ணம் போய்ச் சேருவதை மாவட்ட ஆட்சியர்கள் கண் காணிப்பார்கள். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Comments
Popular posts
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
50% தடுப்பூசிகளை அபகரித்த 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள்
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image