இந்தியாவில் பரவிவரும் கோவிட் பி 1.617 வைரஸ்

இந்தியாவில் பரவி வரும் கரோனா வைரஸின் தன்னமை மாறி வருவருவதாக கண்டறியப்பட்ட நிலையில், இரட்டை விகாரி மாறுபாடு (double mutant variant) கொண்ட கரோனா வைரஸ் (பி .1.617) தற்போது பரவி வரும் வைரஸ்களுடன் இணைக்க போதுமான எண்ணிக்கையில் கண்டறியப்படவில்லை என்று மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

சில மாநிலங்களில் திடீரென அதிகரித்த  பி.1.617, கோவிட் வைரஸ் தொற்றுகளின் எழுச்சியுடன் தொடர்பு இருப்பதைக் காட்டுகிறது. இருப்பினும், பி.1.617 இன் தொற்றுநோயியல் மற்றும் மருத்துவ தொடர்பு மற்றும் எழுச்சி முழுமையாக நிறுவப்படவில்லைஎன்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், பி.1.617, மாறுபட்ட மாறுபாடு என்ற பிரிவின் கீழ் பி.1.1.7 (யுகே மாறுபாடு) உடன் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் பி .1.351 (தென்னாப்பிரிக்கா மாறுபாடு), மற்றும் பி 1 (பிரேசில் மாறுபாடு) என தனி பிரிவுகளில் மத்திய அரசு சேர்த்துள்ளது.

இதுவரை வரிசைப்படுத்தப்பட்ட சுமார் 13,000 மாதிரிகளில், 3532 வகைகளில் மாறுபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இவற்றில், 1527 இல் பி .1.617 மாறுபாடு இருந்தது. இதில் பெரும்பாலானவை தொற்று அதிகம் பரவிய மாநிலங்களாக உள்ள மகாராஷ்டிரா (761), கருநாடகா (146); மேற்கு வங்கம் (124), டில்லி (107), குஜராத் (102), சத்தீஸ்கர் (75), ஜார்க்கண்ட் (61), மற்றும் மத்திய பிரதேசம் (53) போன்றவற்றிலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆகும்.

இதில் பி .1.617 அய்க் கொண்ட 1527 இல், 23 மட்டுமே சர்வதேச பயணத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை அனைத்தும் சமூக பரவலின் ஒரு பகுதியாகும்.

ஆரம்பத்தில், பி. 1.617 மகாராஷ்டிரா மாநிலத்தின் மய்யப்பகுதியில் தான் கண்டறியப்பட்டது. சில மாநிலங்களில் கடந்த ஒன்றரை மாதங்களில் காணப்பட்ட தொற்றுகளின் தற்போதைய எழுச்சி பி.1.617 உயர்வுடன் ஒரு தொடர்பைக் காட்டுகிறது என்று தேசிய நோய் கட்டுப்பாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சுஜீத் சிங் கூறினார்.

இருப்பினும், அதன் தொற்றுநோயியல் மற்றும் மருத்துவ தொடர்பு முழுமையாக நிறுவப்படவில்லை. தொடர்பு இல்லாமல், எந்தவொரு எழுச்சியுடனும் நாம் நேரடி இணைப்பை ஏற்படுத்த முடியாது. எவ்வாறாயினும், பொது சுகாதார பதிலை வலுப்படுத்த மாநிலங்களுக்கு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம்  சோதனை அதிகரிக்கவும், விரைவாக தனிமைப்படுத்தவும், கூட்டத்தைத் தடுக்கவும், தடுப்பூசி போடவும்  பி .1.617 இருப்பதைக் குறிப்பிட்டுள்ள பிராந்தியங்களில், சிங் கூறினார்.

மேலும் கடந்த பிப்ரவரி மாதத்தில் 2 முறையும், மார்ச் மாதத்தில் 4 முறையும், மற்றும் ஏப்ரல் மாதத்தில் 4 முறையும், மரபணு வரிசைமுறை குறித்த தகவல்கள் மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன என்று சிங் கூறினார்.

அய்ரோப்பிய நாடுகளின் வேண்டுகோளைத் தொடர்ந்து, இரட்டை விகாரிகளின் மாதிரிகள் லண்டனுக்கு அனுப்பப்படுவதாகவும், அதற்கு எதிராக தற்போதுள்ள தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், பயோடெக்னாலஜி துறையின் செயலாளர் ரேணு ஸ்வரூப், மரபணு வரிசைமுறை தரவு, தனிமையில், மருத்துவ தரவுகளுடன் தொடர்புபடுத்தும் வரை மற்றும் எந்தவொரு குறிப்பையும் எங்களுக்கு வழங்காது என்று மீண்டும் வலியுறுத்தினார். ஆனால் இரட்டை விகாரி மாறுபாட்டிற்கு எதிராக தடுப்பூசிகள் பயனுள்ளதாக இருப்பதை ஆரம்ப தரவு காட்டுகிறது என்று அவர் கோடிட்டுக் காட்டினார். இந்த வகைகளின் நடுநிலைப்படுத்தல் மதிப்பீடுகளையும் நாங்கள் தயார் செய்துள்ளோம், மேலும் அனைத்து தடுப்பூசிகளும் ஆய்வுகள் செய்யப்படுகின்றன. எங்கள் தடுப்பூசிகள் பயனுள்ளதாக இருப்பதை ஆரம்ப தரவு காட்டுகிறது, என்று ஸ்வரூப் கூறினார்.

பி .1.617, 484 கியூ மற்றும் எல் 425 ஆர் ஆகியவற்றின் பிறழ்வுகள் வைரஸின் முக்கியமான ஸ்பைக் புரதத்தில் அமைந்திருப்பதால், அதை உடலில் உள்ள ஏற்பி உயிரணுக்களுடன் பிணைக்கிறது. மேலும் அதன் அழிவு திறன் குறித்து முன்னரே அரசு சிவப்புக் கொடிகளை உயர்த்தியிருக்க வேண்டும் என்று நிபுணர்கள் முன்பு

தெரிவித்திருந்தனர்.

Comments