மாநிலங்களுக்கு ஆக்சிஜனை பகிர்ந்தளிக்க 12 பேர் குழு: உச்ச நீதிமன்றம் நியமனம்

 புதுடில்லி, மே 9- மாநிலங்களுக்கு ஆக்சிஜனை பகிர்ந்தளிக்க 12 பேர் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்து உள்ளது. நாடு முழுவதும் நாள் தோறும் 4 லட்சம் பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது. இந்த இக்கட்டான நேரத்தில் டில்லி, மகாராட்டிரா உள்ளிட்ட மாநிலங் களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

இதுதொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இவ்வழக்கு நீதிபதிகள் சந்திரசூட், எம்.ஆர்.ஷா அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:

மாநிலங்களுக்கு ஆக்சிஜனை பகிர்ந்து அளிப்பது தொடர்பாக 12 பேர் குழுவை நியமிக்கிறோம். மேற்கு வங்க பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் மருத்துவர் பாபா தோஷ் பிஸ் வாஸ், டில்லி சர் கங்கா ராம் மருத்துவமனை தலைவர் தேவேந்தர் சிங் ராணா, பெங்களூரு நாராயணா ஹெல்த்கேர் தலைவர் மருத்துவர் தேவி பிரசாத் ஷெட்டி, தமிழகத்தின் வேலூரில் செயல்படும் கிறிஸ்டியன் மருத்துவ கல்லூரி பேராசிரியர் ககன்தீப், வேலூர் மருத் துவக் கல்லூரி இயக்குநர் பீட்டர், குருகிராம் மேதாந்தா மருத்துவமனை தலைவர் நரேஷ், போர்டிஸ் மருத்துவ மனை இயக்குநர் ராகுல் பண்டிட், டில்லி சர் கங்காராம் மருத்துவமனை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் சவுமித்ரா ராவத், டில்லி அய்எல்பிஎஸ் மூத்த பேராசிரி யர் சிவகுமார், மும்பை பிரிச் கேண்டி, இந்துஜா மருத்துவமனை இதயநோய் மருத்துவர் ஜாரிர் எப் உத்வாடியா மற்றும் மத்திய சுகாதாரத் துறை செயலாளர், கேபினட் செயலாளர் ஆகியோர் குழுவில் இடம் பெறு கின்றனர்.

அனைத்து மாநிலங்களின் ஆக்சி ஜன் தேவையை நிபுணர் குழு ஆய்வு செய்யும். அதன் அடிப்படையில் அனைத்து மாநிலங்களுக்கும் சரிசம மாக ஆக்சிஜன் பகிர்ந்து அளிக்கப் படும். தற்போதைய ஆக்சிஜன் இருப்பு, விநியோகம், எதிர்கால தேவை குறித்து நிபுணர் குழு பரிந்து ரைகளை சமர்ப்பிக்கும்.

ஆக்சிஜன் தேவை, விநியோகம் தொடர்பாக அந்தந்த மாநிலங்களில் துணைக் குழுக்கள் அளிக்கும் பரிந் துரைகளை 12 பேர் குழு பரிசீலிக்கும். ஆக்சிஜன் சம்பந்தப்பட்ட மாநிலங் களுக்கு முறையாக சென்று சேர்ந்ததா என்பதை நிபுணர் குழு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட் டனர். வழக்கின் அடுத்த விசாரணை 17ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. குழுவில் தமிழகம் முதல் டில்லி வரை பல மாநில மூத்த மருத்துவர்கள் உள்ளனர். இடம்பெற்றுள்ளனர். மருத்துவர்கள் 10 பேரும், அரசு அதி காரிகள் இருவரும் குழுவில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

Comments