மே 11 - கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப் பேரவைக் கூட்டம்

சென்னை,மே 9- புதிதாக தேர்ந் தெடுக் கப்பட்ட எம்எல்ஏக்கள் பதவியேற்ப தற்காக தமிழக சட்டப் பேரவை வரும் 11ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் கூடுகிறது. மறுநாள் பேர வைத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடக் கிறது.

இதுதொடர்பாக தமிழக சட்டப் பேரவைச் செயலாளர் கி.சீனிவாசன் நேற்று (8.5.2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழக 16ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடர் மே 11ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கம் 3ஆவது தளத்தில் உள்ள கூட்ட அரங் கத்தில் தொடங்க உள்ளது. அப்போது சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப் பினர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி நடை பெறும். பதவியேற்க வரும் உறுப்பினர்கள் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற் றதற்கான சான்றிதழை தவறாமல் கொண்டு வர வேண்டும். மே 12ஆம் தேதி காலை 10 மணிக்கு சட்டப் பேரவைத் தலைவர், துணைத் தலை வருக்கான தேர்தல் நடைபெறும்என்று கூறியுள்ளார்.

இதனிடையே, சட்டப் பேரவை யின் தற்காலிகத் தலைவராக கு.பிச் சாண்டி நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக சட்டப் பேரவைச் செயலாளர் கி.சீனிவாசன் வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில், ‘தமிழக சட்டப்பேரவையின் தற்கா லிகத்  தலைவராக கீழ்பெண்ணாத் தூர் தொகுதி உறுப்பினர் கு.பிச் சாண்டியை ஆளுநர் நியமித்துள் ளார். திங்கள்கிழமை (நாளை) காலை 11 மணிக்கு ஆளுநர் முன்பு அவர் உறுதிமொழி அல்லது பற்று றுதி பிரமாணம் எடுத்துக் கொள் வார்என்று தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை முன்னவராக நீர்வளத் துறை அமைச்சர்

துரைமுருகன்  நியமிக்கப்பட்டுள்ள தாகவும் பேரவைச் செயலாளர் தெரிவித் துள்ளார். தற்காலிக பேரவைத் தலைவராக நியமிக்கப் பட்டுள்ள கு.பிச்சாண்டி, புதிய உறுப்பினர் களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். மே 11ஆம் தேதி எம்எல்ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் 12ஆம் தேதி பேரவைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image