.....செய்தியும், சிந்தனையும்....!

 பிள்ளை விளையாட்டா?

*        மகாராட்டிரம் -நாசிக் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிவு - விநியோகம் நிறுத்தம் காரணமாக 24 பேர் உயிரிழப்பு!

>>           .பி.யில் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மரணிக்கவில்லையா? உயிரின் விலை இவ்வளவு மலிவாகிவிட்டதே!

இதுதானேசந்தர்ப்பம்?'

*           கோவி ஷீல்டு - தடுப்பூசி விலை உயர்வு.

>>           எதில்தான் இலாபம் பார்ப்பது என்ற அளவு இல்லையா?

அறிவுக் கொழுந்துகள்!'

*           திருமலை (திருப்பதி) அஞ்சனாத்ரி மலைதான் அனுமன் பிறந்த திருத்தலம்.

- திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

 >>          அனுமனின் தாய், தந்தையர் யார்? வாயு தேவன் புத்திரன் என்கிறது புராணம். வாயுவுக்கு உருவம் ஏது?

‘‘கேட்பவன் கேனயனாக இருந்தால், எருமை மாடு ஏரோப்ளேன் ஓட்டியது'' என்பானாம்!

முட்டை மார்க்

*           கோழிகள் முட்டை இடாததால் பூனே விவசாயி காவல்துறையிடம் புகார்.

>>           கேலியாக இருக்கிறதா? கோழிக்குக் கொடுக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் தீவனமே இதற்குக் காரணமாம்.

கம்பெனி விளம்பரமா?

*          இரட்டை உருமாற்றக் கரோனாவை கோவாக்சின் தடுப்பூசி திறம்பட எதிர்க்கும்.

>>           மக்களைக் குழப்ப வேண்டாம்! கோவிஷீல்டு போட்டுக் கொண்டவர்களின் நிலை என்ன?

Comments