திருவள்ளுவரை அவமதிப்பதா?

உலகத் திருக்குறள் மய்யம் கண்டனம்

 தஞ்சை, ஏப்.14 பாபநாசம் உலகத் திருக்குறள் மய்யத்தில் 13.03.2021இல் நடந்த 272ஆவது மாதக் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம்.

உலகப் பொது மறையாம் திருக்குறள் எனும் மனிதநேய நூலை வழங்கி மங்காப் புகழ் பெற்ற பொய்யாமொழிப் புலவர்  திருவள்ளுவருக்கு, முதுபெரும் தமிழறிஞர்களால் உரு வாக்கம் பெற்று தமிழக அரசும் ஏற்றுக் கொண்ட உருவச்சிலைகள் நாடெங்கும் அமைக்கப்பட்டு விழாக்கள் நடத்தி நன்றிக் கட னாற்றி வரும் இக்காலக்கட்டத்தில் மதவுணர்வும் மொழி வெறியும் கொண்ட ஒரு சிலர் அன்னாரின் சிலைகளை ஊனப்படுத்துவதும் தன்மனப்போக்கில் சாயங்களைப் பூசுவதும், விதவிதமான ஆடை களை அணிவித்து அலங்கோலப் படுத்துவதும் பரவலாக நடந்து வருகிறது. சமீபத்தில் சிபிஎஸ்சி 8-ஆம் வகுப்பு இந்தி பாடப் புத்தகத்தில் காவி உடை, நெற் றியில் திருநீறு, தலையில் குடுமி யுடன் கூடிய படத்தை அச்சிட்டு இவர்தான் திருவள்ளுவர் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இதுபோன்ற அநாகரீக செயல் களை பாபநாசம் உலகத் திருக் குறள் மய்யமும், பாபநாசம் திருக்குறள் தொண்டு அறக்கட் டளையும் வன்மையாக கண் டித்து கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. மொழியுணர்வும், இனவுணர்வு அற்ற மதவெறி யாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டு பிடித்து "சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல்" பாரபட்சமின்றி கடுமை யான தண்டனை வழங்கிட வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.

Comments