ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

·   கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக திருவிழாக்களுக்குத் தடை, பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து செல்வதற்கு மட்டுமே அனுமதி, திரையரங்குகள், வணிக வளாகங்கள் போன்றவற்றில் 50 சதவிகிதம் பேரையே அனுமதிக்க வேண்டும், ஆட்டோக்களில் 2 பேர் மட்டுமே செல்லலாம் என்பன போன்ற கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

டெக்கான் கிரானிகல், சென்னை:

·     தேர்தலில் புதுச்சேரியில் வாக்காளர்களுக்கு பா... பணமும், தங்க நாணயமும் தந்தாக கூறப்பட்டாலும், வெற்றி பெற வாய்ப்பு இல்லை என களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     உயர் நீதிமன்றங்களில் ஓய்வு பெற்ற நீதிபதிகளை தற்காலிகப் பணியில் அமர்த்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் விரைவில் வெளியிட உள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     காசி விஸ்வநாத் கோயில்-கயன்வாபி மசூதி பிரச்சினை தொடர்பாக அய்ந்து பேர் கொண்ட குழுவை நியமித்து ஆய்வு நடத்திட இந்திய தொல்பொருள் ஆய்வு மய்யத்திற்கு (.எஸ்.அய்) வாரணாசி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

·     முதலமைச்சர் மம்தா பேசிய பேச்சு குறித்து நட வடிக்கை எடுக்கும் தேர்தல் ஆணையம், பா...வுக்கு எதிராக அளிக் கப்பட்ட புகார்களில் இதுவரை  என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் சார்பற்ற நாடகத்தையாவது தொடர்ந்திட வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மஹுவா மொய்த்ரா கூறியுள்ளார்.

தி டெலிகிராப்:

·     உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்..போப்டே தலைமையில் நடைபெற்ற அய்ந்து பேர் கொண்ட கொலிஜிய கூட்டத்தில் திரிபுரா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அகில் குரேஷி மற்றும் கருநாடக நீதிபதி நாகரத்னா ஆகியோரை உச்சநீதிமன்றத்திற்கு உயர்த்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

·     ஏற்கெனவே அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் வாங்கியதில் மோசடி செய்ததாக அமலாக்க இயக்குநரகத்தின் விசாரணையில் உள்ள வியாபாரி சுஷென் குப்தா, பிரெஞ்சு நாட்டில் இருந்து இந்தியா 32 ரபேல் விமானம் வாங்கியதில் கையூட்டு பெற்றதாக மீடியா அபார்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

·     தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு (தனுவாஸ்) புதிய துணைவேந்தரை "அவசர அவசரமாக" நியமித்ததற் காக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மீது திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

- குடந்தை கருணா

9.4.2021

Comments