காரைக்குடியில் தெருமுனை பரப்புரைக் கூட்டம்

காரைக்குடி, ஏப்.4 காரைக்குடியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எஸ் மாங்குடி அவர்களை ஆதரித்து தெருமுனை பரப்புரைக் கூட்டத்தில் கழகத்தோழர்கள் பங்கேற்றனர்

காரைக்குடியில் டில்லி விவசாயிகளின் போராட்டக் குழு உறுப்பினர் தேர்தல் பரப்புரை

கழகப்பொறுப்பாளர்கள் வாழ்த்து

காரைக்குடி, ஏப்.4 - டில்லி விவசாயிகளின் போராட்டக் குழு உறுப்பினர் பஞ்சாப் சிங்கம் தோழர்  ராஜ்விந்தர் சிங் கோல்டன்  காரைக்குடியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்  எஸ்.மாங்குடி  அவர்களை ஆதரித்து பரப்புரை செய்ய வந்த போது திராவிடர் கழகத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தனர். உடன் மாவட்ட தலைவர் அரங்கசாமி, மாவட்ட செயலாளர் வைகறை.


கொள்ளிடம் ஒன்றியத்தில் "திராவிடம் வெல்லும்" தெருமுனைப் பிரச்சாரம்

மயிலாடுதுறை, ஏப்.4 மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழகம் பகுத்தறிவாளர் கழகம்  சார்பில் 29-3-2021 அன்று சீர்காழி சட்டமன்ற திமுக வேட்பாளர் மு. பன்னீர்செல்வத்தை ஆதரித்து "திராவிடம் வெல்லும்" தெருமுனைப் பிரச்சாரம் கொள்ளிடம் ஒன்றியத்திற்குட்பட்ட புதுப்பட்டினம், திருமுல்லைவாசல், கடவாசல் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

மாவட்ட கழகக் தலைவர் கடவாசல் குணசேகரன்,கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் பாண்டுரங்கன், சீர்காழி நகரத் தலைவர் சபாபதி ஆச்சாள்புரம் பாண்டியன், பெரியார் இயக்க உணர்வாளர்கள் கூட்டமைப்பின் தோழர்கள் ரவி முரளி, பரசுராமன், ஆசிரியர் வெண் மணி ஆகியோர் கலந்து கொண்டு திமுக கூட்டணிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்று அன்றாடம் விடுதலை ஏட்டில் வரும் விவரங்களை மக்களுக்கு படித்துக்காட்டி பேசியது சிறப்பாக அமைந்தது.


 ஆவடி மாவட்ட திராவிடர் கழகம்

சார்பில் தேர்தல் பரப்புரை

ஆவடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் சா.மு. நாசர் அவர்களை ஆதரித்து ஆவடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 29-3-2021 அன்று பரப்புரை நடைபெற்றது நிகழ்வில் மாநில மகளிர் அணி பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, மாவட்ட தலைவர் தென்னரசு, பகுத்தறிவு பாசறை செயலாளர் கோபால் ஆகியோர் பரப்புரை செய்தனர். உடன் மாவட்ட செயலாளர் இளவரசன், மாவட்ட துணை செயலாளர் பூவை தமிழ்செல்வன், மாவட்ட துணைத் தலைவர் ஏழுமலை, ஆவடி முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்

Comments