தமிழகத்தில் கரோனா பாதிப்பு தினமும் அதிகரிப்பு

புதியதாக 7ஆயிரம் பேர் பாதிப்பு

சென்னை, ஏப்.14  தமிழகத்தில் கரோனா பாதிப்பு தினமும் அதி கரித்து வருகிறது. நேற்று புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை 7 ஆயிரத்தை எட்டியது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

82 ஆயிரத்து 236 பேருக்கு பரிசோதனை

தமிழகத்தில் நேற்று புதிதாக 82 ஆயிரத்து 236 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 4 ஆயிரத்து 203 ஆண்கள், 2 ஆயிரத்து 781 பெண்கள் என மொத்தம் 6 ஆயிரத்து 984 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டி யலில் வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவரும், வெளி மாநிலங்களில் இருந்து வந்த 25 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 225 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற் பட்ட 1,052 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக சென்னையில் 2 ஆயிரத்து 482 பேரும், செங்கல்பட்டில் 771 பேரும், கோவையில் 504 பேரும், குறைந்த பட்சமாக அரியலூரில் 9 பேரும், பெரம்பலூரில் 3 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

18 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இதுவரை2 கோடியே 3 லட்சத்து 54 ஆயிரத்து 41 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 9 லட்சத்து 47 ஆயிரத்து 129 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 5 லட் சத்து 71 ஆயிரத்து 717 ஆண்களும், 3 லட்சத்து 75 ஆயிரத்து 376 பெண் களும், 3-ம் பாலினத்தவர் 36 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 34 ஆயிரத்து 364 குழந்தை களும், 60 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 31 ஆயிரத்து 669 முதியவர் களும் இடம் பெற்றுள்ளனர். கரோனாவுக்கு அரசு மருத்துவ மனையில் 10 பேரும், தனியார் மருத்துவமனையில் 8 பேரும் என 18 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் சென் னையில் 5 பேரும், செங்கல்பட்டில் 3 பேரும், கடலூர், நெல்லையில் தலா இருவரும், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, மதுரை, தஞ்சாவூர், திருவள்ளூரில் தலா ஒருவரும் என 10 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. தமிழகத்தில் இதுவரை 12 ஆயிரத்து 945 பேர் கரோனா நோய் தொற்றால் உயிரிழந் துள்ளனர்.

3,289 பேர் டிஸ்சார்ஜ்

கரோனா பாதிப்பில் இருந்து 3,289 பேர் நேற்று டிஸ்சார்ஜ்செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிக பட்சமாக சென்னையில் 853 பேரும், கோவையில் 369 பேரும், செங்கல் பட்டில் 310 பேரும் அடங்குவர். இதுவரையில் 8 லட்சத்து 84 ஆயிரத்து 199 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 49 ஆயிரத்து 985 பேர் உள்ளனர்.

இங்கிலாந்தில் இருந்து தமிழகத் துக்கு கடந்த ஜனவரி மாதம் 8ஆம் தேதி முதல் நேற்று வரை 4 ஆயிரத்து 208 பயணிகள் வந்துள்ளனர். இவர்களில் 3 ஆயிரத்து 665 பேர் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது. இதில் 3 ஆயிரத்து 629 பேருக்கு பாதிப்பு இல்லை என உறுதி செய்யப் பட்டுள்ளது.

மேலும்  15 பயணிகளுக்கு புதிய வகை கரோனா தொற்று ஏற் பட்டுள்ளது. 21 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. இதுவரை இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த 39 பேருக்கு புதியவகை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

Comments