அண்ணா பல்கலைக்கழக பருவத் தேர்வில் மாற்றம் புத்தகத்தை பார்த்து எழுத அனுமதி

சென்னை, ஏப். 20- அண்ணா பல்கலைக்கழக பருவத் தேர்வை மாணவர்கள் புத்த கத்தை பார்த்து எழுதும் வகையில் கேள்விகள் மாற்றி அமைத்து தேர்வு நடத்த உள் ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. வருகின்ற பருவத் தேர்வில் இணையம் மூலமாக ஒரு வரி கேள்வி பதில் போல் இல்லாமல், விரிவாக பதில் அளிக்கும் வகையில் கேள்வி கள் கேட்கவும் அண்ணா பல் கலைக்கழகம் திட்டமிட்டு உள்ளது.

இதற்காக பிரத்யேக வினாத்தாள் உருவாக்கப்பட உள்ளது. அண்ணா பல் கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கான பருவத் தேர்வு வருகிற மே மாதம் நடைபெற உள்ளது. கரோனா இரண்டாம் அலை பரவல் தாக்கம் அதிகம் உள்ளதால் தேர்வுகள் நேரடியாக நடை பெறுவது ரத்துச் செய்யப் பட்டுள்ளது. கரோனா முதல் அலையின் போது கடந்த ஆண்டு ஊரடங்கு அமல்படுத் தப்பட்டபோது கடந்த முறை நடைபெற்ற பருவத் தேர்வு களை பிரத்யேகமாக உருவாக் கப்பட்ட மென்பொருளை கொண்டு இணைய வழியில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது.

இந்த நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகம் இணையவழி தேர்வு முறை யில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி இணைய வழித் தேர்வு நடை பெறும். மாணவர்கள் இந்த தேர்வை புத்தகத்தைப் பார்த்து எழுத அனுமதிக்கப்பட உள் ளனர். கேள்விகள் நேரடியாக கேட்கப்படாமல் மாணவர் கள் கேள்விகளை நன்கு புரிந்து கொண்டு அதற்கேற்ப விடையளிக்கும் வகையில் வினாத்தாள் தயாரிக்கப்பட உள்ளது. அதன்படி விடை எழுதும்போது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் மாண வர்கள் புத்தகத்தை பார்த்து அறிந்து விடை அளிக்கலாம் அதேபோன்று தேர்வின் போது இணையதளத்தை பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments