பெரியாரைச் சீண்டாதீர்! எரிமலையைத் தூண்டாதீர்!

   - கவிச்சுடர். கவிதைப்பித்தன்

என்ன துணிச்சல்!

என்ன துணிச்சல்

ஈனங் கெட்ட அரசுக்கு!  தன்

மானங் கெட்ட அடிமைக்கு!

 

சென்னைச்  சாலையில்

தந்தை பெரியார்

பெயரை நீக்கும் அளவுக்கு - ஆணை

பிறப்பித் ததுயார் இவனுக்கு?

 

காவிக்  கூட்டம்

திமிர்வெறி யாட்டம்

நித்தம் சகிக்கவில்லை!  நம்

நெஞ்சு பொறுக்கவில்லை!

கருப்புச் சட்டைக்

கிழவனைத்  தொட்டால்

வெடிக்கும் நெருப்புமலை!  கனல்

தெறிக்கும் புரட்சிஅலை!

 

முதுகுக்குப்  பின்னால்

ஒளிந்துகொண் டே, கணை

விடுப்பது ஒன்றும் வீரமில்லை!

இந்த மோடிகளின்,

எடப்பாடிகளின் திமிர்

முடிவுக்கு வரும்நாள் தூரமில்லை!

Comments