ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

·    ஒற்றைக்காலில் நின்று மேற்கு வங்கத்திலும், அடுத்து இரண்டு கால்களில் நின்று டில்லியிலும் வெற்றி பெறுவேன். ஒரு குஜராத்தி கூட மேற்கு வங்கத்தில் நுழைந்து வெற்றி பெற முடியாது என அம் மாநில முதல்வர் மம்தா சூளுரை.

·     மக்கள் கூட்டம் குறைந்ததால், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா பங்கேற்க இருந்த இரண்டு தேர்தல் பரப்புரைகள் மேற்கு வங்கத்தில் ரத்து செய்யப்பட்டன.

டெக்கான் கிரானிகல் சென்னை:

·     சென்னை கோயம்பேடு அருகே அரசு நிலத்தை தனியாருக்கு விற்றது நில மோசடி என முதல்வர் எடப்பாடி பழனிசாமிமீது நடவடிக்கை எடுத்திட அனுமதி கோரி திமுக ஆளுநரிடம் மனு அளித்தது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     .பி.யில் யோகி தலைமையிலான பாஜக ஆட்சியில் தேசிய பாதுகாப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று, இது தொடர்பான 120 வழக்குகளில் 94 வழக்குகளை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

·   ரஷ்யாவில் தற்போதைய அதிபர் விளாதிமிர் புடின் 2036-வரை அதிபராக தொடர்ந்து நீடித்திட வகை செய்யும் சட்டத்தில் கையெழுத்திட்டார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     மேற்கு வங்கத்தில் இன்னும் அய்ந்து கட்ட தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், பாஜகவில் இருந்து பல தலைவர்கள் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தனர்.

தி டெலிகிராப்:

·     ரபேல் விமானம் வாங்கியதில் டசால்ட் நிறுவனம் இந்திய தரகருக்கு ரூ.9 கோடி அளவில் லஞ்சம் கொடுத்துள்ளதாக மீடியா பார்ட் என்ற நிறுவனம் அறிக்கை அளித்துள்ளது.

·    சட்டீஸ்கரில் மாவோயிஸ்டுகளால் ராணுவ வீரர்கள் கொல் லப்பட்ட நாளில் மத்திய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேர்தல் பரப்புரையில் தீவிரமாக இருந்தார் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

 

- குடந்தை கருணா

6.4.2021

Comments