கழக செயல்வீரர் க.செல்வக்குமார் - சு.சுகந்தி சுயமரியாதை திருமணம்

 கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் நடத்தி வைத்தார்

கெடிலம், ஏப். 14- கழக செயல்வீரர் .செல்வக்குமார்-சு.சுகந்தி மணவிழாவை கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் நடத்தி வைத்தார். கெடிலத்தில் கொள்கை பிரச்சார விழாவாக நடந்தது

உளுந்தூர்பேட்டை வட்டம் களத்தூர் கழக செயல் வீரர் .செல்வக்குமார் - திருவெண்ணைநல்லூர் சு.சுகந்தி மணவிழா 11.4.2021 அன்று காலை 11 மணிக்கு கெடிலம் வி.எஸ்.மகாலில்கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் நடந்தது. ஒன்றியதலைவர் சக்திவேல் வரவேற்புரையாற்றினார். விழுப்புரம் மாவட்டத் தலைவர் .சுப்பராயன், கல்லை மாவட்டத் தலைவர் .சுப்பராயன் மாவட்ட அமைப் பாளர் பெரியசாமி மருத்துவர் சா.மா.மாசிலாமணி, வி.சி.. அறிவுக்கரசு, மாநில இளைஞரணி செய லாளர் இளந்திரையன், மாவட்ட செயலாளர் வெற்றிச் செல்வன், ஊராட்சி தலைவர் முத்து.கதிரவன், வண் டிப்பாளையம் ராவணன், வடலூர் கோ.இந்திரசித், நெய்வேலி பாவேந்தர்விரும்பி, விருத்தாசலம் சேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் மாவட்ட செயலாளர் அரங்க.பரணீதரன் நன்றி கூறினார்.

கொள்கை பரப்புரை விழாவாக மணவிழா நடைபெற்றது.

Comments