தினசரி பாதிப்பு - புதிய உச்சம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா

புதுடில்லி, ஏப்.9  இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று (8.4.2021) புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்குதலுக்கு ஆளாகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த 5 ஆம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் முதல் முறையாக தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது.

இந்நிலையில் நேற்று கரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சத்து 26 ஆயிரத்து 789 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பால் ஒரே நாளில் 685- பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை நாடு முழுவதும் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானோர் எண்ணிக்கை 1 கோடியே 29 லட்சத்து 28 ஆயிரத்து 574 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவில் இருந்து இதுவரை குணமடைந் தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 18 லட்சத்து 51 ஆயிரத்து 393 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 9 லட்சத்து 10 ஆயிரத்து 319- பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கரோனாவுக்கு இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 66 ஆயிரத்து 862- ஆக உள்ளது.

நாட்டில் இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை 9 கோடியே 01 லட்சத்து 98 ஆயிரத்து 673 ஆக உயர்ந்துள்ளது.

Comments