நாட்டில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இருக்கும் போது வெளிநாட்டுக்கு ஏற்றுமதிக்கு தடையில்லையாம்

புதுடில்லி. ஏப். 14 நாட்டில் கரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு உள்ள நிலையில் தடுப்பூசி ஏற்றுமதிக்குத் தடை விதிக்கவில்லை என தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 1.6 லட்சத்துக்கும் அதிக மாகி உள்ளது.  உலக அளவில் இது மிகவும் அதிகமாகும்.   கரோனா பரவுவதைத் தடுக்க தடுப்பூசிகள் மிகவும் அவசிய மாகும்.   தற்போது இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் உற்பத்தி செய்யும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் உற்பத்தி செய்யும் கோவாக்சின் ஆகியவை போடப்படுகின்றன. இந்தியாவின் பல மாநிலங்களிலும் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  எனவே தற்போது உள்நாட்டுத் தேவை அதிகமாக இருப்பதால் இந்த இரு கரோனா தடுப் பூசிகளையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் மத்திய அரசை வலி யுறுத்தினர்.

இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தக கொள்கையின்படி நாட்டுக்கு அத்தியாவசியமான பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தடை விதிக்க முடியும்.  எனவே தற்போது நமக்கு கரோனா தடுப்பூசிகள் அத்தியாவசிய தேவையாக உள்ள தால் அவற்றை ஏற்றுமதி செய்யத் தடை விதிக்க வேண்டும் என நாடெங்கும் கோரிக்கை எழுந் துள்ளது.

பன்னாட்டு கரோனா தடுப்பூசி அமைப்பு இந்தியாவில் இருந்து 9 கோடி டோஸ்கள் கரோனா தடுப்பூசி மருந்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது.   இதில் இந்திய கரோனா தடுப்பூசி உற்பத்தியாளர்கள் 1.8 கோடி டோஸ்கள் மட்டுமே அளித்துள் ளனர்.  இதையொட்டி அரசு அதிகாரிகள் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாகத் தெரிய வந்துள்ளது.

இந்த கூட்டத்தில் இரு நிறுவனங்களும் தங்கள் ஏற்று மதியை நிறுத்தினால் தங்கள் மீது மற்ற நாடுகள் சட்ட பூர்வ நடவடிக்கைகள் எடுக்கும் என அரசுக்குத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.   இதைத் தவிரப் பல ஏழை நாடுகளுக்கு இந்திய நிறுவனங்கள் இலவசமாகவும் கரோனா தடுப்பூசிகளை வழங் குகிறது. எனவே தற்போதைய நிலையில் மத்திய அரசு ஏற்று மதிக்குத் தடை விதிக்கும் நிலை யில் இல்லை எனக் கூறி உள்ள தாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.   மேலும் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யாவிட்டால் வெளிநாடு களுக்கு இழப்பீடு அளிக்க வேண் டிய நிலை உள்ளதால் மத்திய அரசு கரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதிக்கு எவ்வித தடையும் விதிக்கவில்லை என அதே தக வல்கள் தெரிவிக்கின்றன.

Comments