சாமியார் ஆளும் உ.பி.யில் கொடூரம் ஒரு படுக்கைக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் காத்திருப்பு

மத்திய அமைச்சரின் சகோதரருக்கே மருத்துவமனையில் இடமில்லை

லக்னோ, ஏப். 20  லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல் கலைக்கழக மய்யத்திற்கு வெளியே சுமார் 20 படுக்கைகள் மற்றும் சில அடிப்படை மருத்துவ உபகர ணங்கள் உள்ளன. இந்த மாற்றத் திற்கு எந்தத் தடையும் இல்லை, வெப்பநிலை மாற்றத்தை குறித்து யாரும் கேள்வி கேட்கப்படுவது மில்லை அல்லது ஸ்கேன் செய் யப்படுவதுமில்லை. சமூக விலகல் அர்த்தமற்றதாகிறது. இறுதியில் கரோனா வழிகாட்டி புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு நெறிமுறையும் ஒரு நோயாளி செல்லும் நிமிடத்தில் மறைந்துவிடுகிறது.

பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கையில், மகாராட்டிராவுக்கு அடுத்து  நாட்டின் இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கையைக் கொண்டு உத்தரப்பிரதேசம் உள் ளது.  ஏற்கெனவே பலவீனமான சுகாதார உள்கட்டமைப்பு தற் போது மேலும் நீண்டுள்ளது. லக்னோவில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் அய்.சி.யூ மற்றும் வென்டிலேட்டர் படுக் கைகள் இல்லை என்றே பொதுமக்கள் புகாரளிக்கின்றனர்.

லக்னோவில் வசிக்கும் 38 வய தான விகாஸ் வர்மா கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச் சைக்கு வந்துள்ளார். அவருக்கு  முகக் கவசம்  மாட்டிவிட்டு படுக்கை கிடைக்கும்போது உள்ளே அழைப் பதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்என்று கூறினார்.

அவருக்கு அருகே கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட  70 வய தான சர்லா அவஸ்தி அமர்ந்திருக் கிறார். அவரது மகன் வைபவ் அவஸ்தி, “என் அம்மா சுவாசப் பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தொடங்கிய பிறகு, நான் அவரை அய்ந்து வெவ்வேறு தனியார் மருத் துவமனைகளுக்கு அழைத்துச் சென்றேன். ஆனால் அவர்கள் அனைவரும் 'வென்டிலேட்டர்'கள் இல்லை என்று சொன்னார்கள். நான் இறுதியாக அவரை இங்கு அழைத்து வந்தேன். ஆனால், இப்போது அவருடைய ஆக்சிஜன் அளவு குறைந்து வருகிறது. அவருக்கு ஒரு அய்.சி.யூ படுக்கை மிகவும் தேவை. என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லைஎன்று கூறினார்.

 மருத்துவமனை ஊழியர்கள் அதிகமான படுக்கைகள் இல்லாத நிலையில், கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை  வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளவும்,  சுடுதண்ணீர் குடியுங்கள் ஆவிபிடியுங்கள், வீட்டிற்குப் போங்கள்எங்களிடம் படுக்கைகள் இல்லை. எங்களிடம் ஆக்சிஜன் இருந்தால், நோயாளிக்கு அது தேவைப்பட் டால், நாங்கள் அதை வழங்க முயற்சி செய்கிறோம்என்று  கூறுகின்றனர்

சில நாட்களாக100-க்கும் மேற் பட்ட நோயாளிகள் ஒரு படுக்கைக்கு வரிசையில் காத்து நிற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் லக்னோவில் 3,138  பாதிக்கப்பட்டவர்கள் இருந்தனர். ஏப்ரல் 16 வெள்ளிக்கிழமைக்குள், அந்த எண்ணிக்கை 40,753-ஆக உயர்ந்துள்ளது. இது மாநிலத்தின் தொற்றுப்பரவல் அபாயக் குறியீடு 27 சதவீதத்திற்கும் அதிகம். மேலும், தொற்று இரண்டாம் அலை தொடங்கியதிலிருந்து மாவட்டத்தில் கோவிட் சோதனை செய்த 1.33 லட்சம் பேரில், 48,014 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.

லக்னோவில் எண்ணிக்கையில் அதிகரிப்பு குறித்துக் கேட்டபோது, சோதனை அதிகமாகிவிட்டது, தொற்றும் அதிகம் வருகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறு கின்றனர்.

கோவிட் படுக்கைகளின் எண் ணிக்கை விரைவில் 520 முதல் 3,000 படுக்கைகள் வரை அதிகரிக்கும் என்று கேஜிஎம்யூ மருத்துவமனை   செய்தித் தொடர்பாளர் சுதிர் சிங் கூறுகிறார். ஆனால் தொற்று பரவலைக் கணக்கிடும் போது இது மிக மிக குறைவானதாகவே தெரிகிறது,

தலைநகர் லக்னோவில் மட்டுமே நாளொன்றுக்கு 5000 நோயாளிகள் உருவாகின்றனர். இப்படி இருக்க 3000 படுக்கைகள் எம்மாத்திரம் என்று தெரியவில்லை. அதே நேரத்தில் உத்தரப் பிரதேசத்தில் கடுமையான ஆக்சிஜன் தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது,

 இதுவரை நடந்த பெரும்பாலான உயிரிழப்புகள் ஆக்சிஜன் குறை பாட்டால் நடந்தது என்பதை மருத்துவமனை நிர்வாகமும் அரசும் மூடி மறைத்துவருகிறது என்று உள்ளூர் ஊடகவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். 

இந்த நிலையில் மத்திய அமைச் சர் வி. கே. சிங்-கின் சகோதரருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டு மூச்சுத் திணறலால் பாதிக்கப் பட்டார். அவரது உறவினர்கள் தனியார் மருத்துவமனையை அணுக அங்கு இடமில்லை என்று கூறிவிட்டனர். இதனை அடுத்து வி.கே. சிங் தனது சமூகவலைதளப் பக்கத்தில் எனது சகோதரருக்கு ஒரு படுக்கை கொடுங்கள் என்று மருத்துவமனை நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக் கும் அவலம் ஏற்பட்டுவிட்டது.

Comments