மீன்பிடி தடைக்காலம் இன்று துவக்கம்

புதுச்சேரி, ஏப்.15 புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்தியங்களில் 61 நாட்களுக்கான மீன்பிடி தடைக்காலம் இன்று (15.4.2021)முதல் துவங்குகின்றது.

கடல் வளத்தை பாதுகாக்கவும், மீன்கள் இனப்பெருக்கத்திற்கும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இந்த ஆண் டுக்கான மீன்பிடி தடைக்காலம் இன்று 15ஆம் தேதி புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்தியங் களில் தொடங்குகிறது. மீன்பிடி தடைக்காலத்தையொட்டி ஆழ்கட லில் இருந்த அனைத்து விசைப் படகுகளும் கரை திரும்பின.மாநி லத்தில் மீன்பிடி தடைக்காலம் குறித்து மீன்வளத் துறை சார்பு செயலர் கணேசன் பிறப்பித்துள்ள உத்தரவு: மீன்பிடி தடைக்காலத்தை யொட்டி ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாட் களுக்கு புதுச்சேரி பிராந்தியத்தில் கனகசெட்டிக்குளம் முதல் மூர்த் திக்குப்பம் வரையிலும், காரைக்கால் பிராந்தியத்தில் மண்டபத்துர் முதல் வடக்கு வாஞ்சூர் வரையிலும், ஏனாமிலும் கடல் பகுதிகளிலும் பாரம்பரிய மீன்பிடி படகுகளான கட்டுமரம், நாட்டுப் படகுகளை தவிர அனைத்து வகை படகுகள் குறிப்பாக இழுவலை கொண்டு விசைப்படகில் மீன்பிடிக்க தடை செய்யப்படுகின்றது.

இதேபோன்று மாகியில் ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரை 61 நாட்கள் பாரம்பரிய மீன்பிடி படகுகளான கட்டுமரம், நாட்டுப் படகுகளை தவிர அனைத்து வகை படகுகள் குறிப்பாக இழு வலை கொண்டுவிசைப்படகில் மீன்பிடிக்க தடை செய்யப்படுகின் றது. இவ்வாறு உத்தரவில் கூறப் பட்டுள்ளது.

Comments