உரங்களின் விலை உயர்வு: டெல்டா மாவட்ட விவசாயிகள் கண்டனம்

தஞ்சாவூர், ஏப்.12 பெட்ரோல், டீசல் பொருட்களை தொடர்ந்து உரங்களின் விலையை திடீ ரென 60 சதவீதம் உயர்த்திய மைக்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள் ளனர்.

விவசாயத்துக்கு பயன் படுத்தப்படும் ரசாயன உரங் களை தயாரிக்கும் நிறுவனங் கள் கடந்த மூன்று நாள்க ளுக்கு முன்பாக டிஏபி 50 கிலோ கொண்ட ஒரு மூட் டையை ரூ.1200 லிருந்து ரூ.1900 ஆக உயர்த்தியுள்ளன. அதே போல் காம்ப்ளக்ஸ் 15:15 உரம் ரூ.1150 லிருந்து ரூ.1650 ஆகவும், காம்ப்ளக்ஸ் 20:20 உரம் ரூ.1000-த்திலிருந்து ரூ.1350ம் திடீரென உயர்த்தி யுள்ளன. இந்த விலை உயர் வால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் கூறுகை யில், 2015-ஆம் ஆண்டு பிரத மர் மோடி உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் நடை பெற்ற விவசாயிகள் மாநாட் டில், 6 ஆண்டுகளுக் குள் ஒவ் வொரு விவசாயிகளின் வரு வாயும் இரட்டிப்பாக்கப்படும் என சூளுரைத்தார்.

ஆனால் தற்போது நான்கு மாநிலங்களில் தேர்தல் முடிந் ததும் இந்திய விவசாயிகளை வஞ்சித்துவிட்டு, திடீரென உரங்களின் விலையை மத்திய அரசின் ஆதரவோடு உயர்த்தி யுள்ளனர். இந்த விலை உயர்வை நியாயப்படுத்த வேண் டுமானால் மத்திய அரசு உட னடியாக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3500-ம், கரும்பு டன் ஒன் றுக்கு ரூ.5 ஆயிரம் விலை உயர்த்தி வழங்க வேண் டும். இல்லையென்றால் உரங்க ளின் விலை உயர்வை திரும் பப் பெற வேண்டும் என்றார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.செந்தில் குமார் கூறுகை யில், பிரதமர் மோடி ஆட் சிக்கு வந்த 7 ஆண்டு களில் நெல் கிலோவுக்கு 55 பைசா மட்டுமே உயர்த்தியுள்ளார். அதே நேரத்தில் டிஏபி உரம் கிலோவுக்கு ரூ.15 உயர்த்த அனுமதி வழங்கி யுள்ளார்.

தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வு, உரங்க ளின் விலை உயர்வால் விவசாயிகள் விவசாயத்தை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப் படுவார்கள். உற் பத்தி செலவு அதிகரிக்கும் போது, அதற்கு ஏற்றாற்போல் கொள் முதல் விலையையும் உயர்த்தி வழங்க வேண்டும். உரங்களின் 60 சதவீத விலை உயர்வால் சிறு, குறு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே உயர்த்தப்பட்ட விலை உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றார்.

Comments