ஒவ்வொரு இந்தியரும் பாதுகாப்பான வாழ்க்கைக்கு தகுதியானவர் கரோனா தடுப்பூசி குறித்து ராகுல்காந்தி கருத்து

 புதுடில்லி,ஏப். 8  'ஒவ்வொரு இந்தியரும் பாதுகாப்பான வாழ்க்கைக்குத் தகுதியானவர்' என 18வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும்  கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என பல மாநிலங்கள் வலியுறுத்தி இருப்பது குறித்து காங்கிரஸ் தலைவர்  ராகுல்காந்தி சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கரோனா பரவல் உச்சம் பெற்றுள்ள நிலையில், 18வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என பல மாநிலங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால், மத்தியஅரசு, அதற்கு மறுப்பு தெரிவித்து, படிப்படியாக மட்டுமே தடுப்பூசி போட முடியும் என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில்,  மத்தியஅரசின் நிலை குறித்து,  அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்து சட்டுரைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர், "மக்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களை விவாதிப்பது நகைப்புக்குரியது. ஒவ்வொரு இந்தியரும் பாதுகாப்பான வாழ்க்கைக்கான வாய்ப்புக்கு தகுதியானவர்"  என காட்டமாக விமர்சித்துள்ளார்.

 

 

Comments