மூடநம்பிக்கையை வளர்க்கும் அரசு உத்தரவை திரும்பப் பெறுக!

 இரா.முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை,ஏப்.15- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில்  மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு,

தமிழ்நாடு அரசு விடுமுறை நாட்களிலும், குறிப்பாக சித்திரை 1, ஆடி 18, தைப்பூசம் ஆகிய நாட்களில் பத்திரப் பதிவு அலுவலகங்கள் செயல்பட வேண்டும் என்றும், இந்நாட்களில் பதிவு செய்யப்படும் ஆவணத்திற்கு கூடுதல் பதிவுக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இந்த நாட்கள்நல்ல நாட்கள்என்பதுநம்பிக்கையேதவிர இதற்கு அறிவியல் ஆதாரங்கள் ஏதுமில்லை. மற்ற நாட்கள் கெட்ட நாட்களும் அல்ல. பகுத்தறிவுக்கு ஆதரவாக தனது வாழ்நாள் முழுவதும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக போராடிய பெரியார் வழி நடப்பதாகக் கூறிக் கொள்ளும் அஇஅதிமுக முற்றிலும் காவி மயத்தில் கலந்து போனதற்கு அரசின் உத்தரவு ஆவண சாட்சியாகும். இது மக்களிடம் மூடநம்பிக்கையை மேலும் ஊக்கமூட்டி வளர்க்கும் செயலில் அரசு நிர்வாகம் ஈடுபடுவதை  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன் விடுமுறை நாட்களில் கூடுதல் பதிவுக் கட்டணம் வசூலித்து, அலுவலகம் செயல்பட வேண்டும் என்ற உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

முகக்கவசம் அணியாத 2.39 லட்சம் பேருக்குரூ.5.07 கோடி அபராதம்

சென்னை, ஏப்.15 முகக்கவசம் அணியாத 2.39 லட்சம் பேருக்கு ரூ.5.07 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு இறுதியில் இருந்து குறைந்து வந்த கரோனா தொற்று, மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க முதல் கட்டமாகப் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் செல்பவர் களிடம் சுகாதாரத் துறை சார்பில், தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939இன் படி அபராதம் விதிக்கப்படுகிறது.

இதன்படி தமிழகம் முழுவதும் முகக்கவசம் அணியாதவர் களிடம் இருந்து ரூ.200 அபராதம் வசூலிக்கப்படுகிறது. அதே போல பொது இடங்களில் எச்சில் துப்புவர்களிடம் 500 ரூபாயும், தனிமனித இடைவெளியைப் பின்பற்றாதவர்களிடம் இருந்து 500 ரூபாயும் அபராதமாகப் பெறப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து நேற்று (14.4.2021) செய்தியாளர் களிடம் பேசிய சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ் ணன், ‘’தமிழகத்தில் முகக்கவசம் அணியாத 2.39 லட்சம் பேரிடம் இருந்து ரூ.5.07 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சென் னையில் மட்டும் ரூ.9.74 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தொற்றைக் குறைக்க முக்கியமான சில அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சோதனைகளின் எண்ணிக்கை களை அதிகரித்து, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும். நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளைக் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுசெல்ல வேண்டும்‘’ என்று தெரிவித்துள்ளார்.

அண்மையில் முகக்கவசத்தின் அவசியம் குறித்துப் பேசிய ஜெ.ராதாகிருஷ்ணன், ‘’பிப்ரவரி மாதம் வரை கட்டுக்குள் இருந்த கரோனா, இப்போது சவாலாக மாறி வருகிறது. இதற்குக் காரணம் பெரும்பாலான மக்கள் அறவே முகக்கவசம் அணியாமல் செல்வதுதான். பொது இடங்களுக்கு வந்தாலே முகக்கவசம் அணியவேண்டும்; கூட்டம் கூடினால் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு வர வேண்டும்.

முகக்கவசம் அணியாததற்காக அபராதம் தொடர்ந்து வசூல் செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும், ஏமாற்றுகிறார்கள். அப்படிச் செய்து தங்களைத் தாங்களே மக்கள் ஏமாற்றிக் கொண்டிருக் கிறார்கள். இதில் மக்களிடம் மனமாற்றம் தேவை’’ என்று

தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Comments