தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பி வைக்க வேண்டும்

 தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின்  வலியுறுத்தல்

சென்னை, ஏப்.16 கரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், தமிழகத் திற்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பி வைக்க மு..ஸ்டாலின் வலியுறுத்தி யுள்ளார்.

திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் விடுத்துள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது,

கரோனா பெருந்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் காட்டுத் தீ போல் அதிகரித்து வருகின்ற சூழலில் அனைவருக்கும் தடுப் பூசி எனக் கொள்கை முடிவு எடுக்க வேண்டிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா... அரசு, அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி என்ற முடி வினை எடுத்திருப்பது மிகுந்த மன வேதனையளிக்கிறது.

கரோனா தொற்றுப் பரவலின் இரண்டாவது அலை ஏற்பட்டி ருப்பதாகக் கூறப்படும் நிலையில், தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டோ ரின் எண்ணிக்கை 49,985 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 7,819 பேர் பாதிக்கப்பட்டு, சென்னை, செங்கல்பட்டு, கோவை, காஞ்சிபுரம், மதுரை, திருவள்ளூர், திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் கரோனா தொற்று அதி வேக மாகப் பரவி வருவதாகத் தமிழக அரசின் புள்ளிவிவரங்களே தெரிவிக்கின்றன.

எனவே, கரோனா தொற்று தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி - மருத்துவமனைகள் எல் லாம் நிரம்பி வழியும் சூழ்நிலை உரு வாகியுள்ள இந்த நேரத்தில், அனைவருக்கும் தடுப்பூசி என்ற கொள்கை முடிவினை எடுத்து தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளைத் தாமதமின்றி போர்க்கால அடிப்படையில் அனுப்பி வைக்க வேண்டும் என்று மத்திய அரசை - குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி அவர் களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments