கரோனா: ரேசன் கடைகளில் தொற்று அச்சம்: "பயோமெட்ரிக்" பதிவு தேவையா?

திருப்பூர், ஏப்.16 கரோனா அச்சு றுத்தல், இரண்டாவது அலையாக பரவிய பிறகும், ரேஷன் கடையில், ‘பயோமெட்ரிக்விரல்ரேகை பதிவு தொடர்வதால், மக்கள் அச்சத்தில் சிக்கியுள்ளனர்.கரோனா போய் விட்டது, என்று நிம்மதியாக, இயல்பு நிலை திரும்பிய நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், மீண்டும் கரோனாபூஸ்ட்ஆகியுள்ளது. மாவட் டம் வாரியாக தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள நிலையில் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.

பொதுமக்கள் கூட்டம் சேர வேண்டாம்; சமூக இடைவெளியை பின்பற்றுங்கள் என, அரசு அறிவுறுத்தி வருகிறது. முதலில், இரண்டு அடி தூரம் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என்ற அரசு, தற்போது, ஆறு அடி தூரம் இடைவெளி தேவை என்கிறது.முகக் கவசம் அணிய வேண்டும்; அடிக்கடி கைகளை சோப்பு கொண்டு கழுவ வேண்டும். சானிடைசர் மூல மாகவும் கைகளை சுத்தம் செய்ய வேண்டுமென, தொடர்ந்து அறிவு றுத்தப்படுகிறது. தொற்று திடீரென அதிகரித்து விட்ட தால், எவ்வாறு சிகிச்சை அளிப்பது, தேவையான வசதி களை செய்வது என, சுகாதாரத்துறை ஆய்வு செய்து வருகிறது.

நாளுக்கு நாள் கட்டுப்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், ரேஷன் கடைகளில், ‘பயோமெட்ரிக்பதிவு முறை தொடர்கிறது.

அதாவது, பல்வேறு பகுதிகளில் இருந்து ரேஷன் கடைக்கு வரும் அட்டைதாரர், தங்களது கைரேகையை பதிவு செய்தால் மட்டுமே, பொருட்கள் பெற முடியும்.எந்தவொரு கூட்டுறவு சங்கமும், பொதுமக்கள் கைகளை சுத்தம் செய்ய, ‘சானிடைசர்வழங்க வில்லை.

கரோனா ஊரடங்கின் போதே, சானிடைசர் வழங்கப்படவில்லை; இப்போது எதிர்பார்க்கவும் முடியாது.பொதுமக்கள், நோய்த் தொற்றுடன் சென்று, கைரேகையை பதிவு செய்தால், அடுத்து வரும் மக்களுக்கும், கடை ஊழியர்களுக்கும் தொற்றுப் பரவும் அபாயம் உள்ளது. எனவே, ரேஷன் கடைகளில், ‘பயோமெட்ரிக்பதிவு முறைக்கு, தற்காலிக விலக்கு அளிக்க வேண்டும் என்பது, பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Comments