சனாதன தர்மம் என்ற நச்சுக் கொள்கையை எதிர்த்துப் போராடி வென்றவர் தந்தை பெரியார் : ப. சிதம்பரம்

சென்னை, ஏப்.6 முன்னாள் மத்திய அமைச்சர் .சிதம்பரம் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் பெரியாரிசம் (பெரியார் கொள்கையை) ஒழிக்கவே பா... இங்கு வந்திருக்கிறது என்று பா... தலைவர் மற்றும் ஒருவர் கூறியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன் சனாதனதர்மம் என்ற நச்சுக்கொள்கையை எதிர்த்துப்போராடி வென்றவர் தந்தை பெரியார். தமிழ் நாகரிகத்தையும் தமிழர் நாகரிகத்தையும் தமிழர் தன்மானத்தையும் மீட்டவர்.

தந்தை பெரியார் காலம்காலமாக ஒடுக்கப் பட்டமக்களுக்கு சமுதாய விடுதலை மற்றும் சமூகநீதியைப் பெற்றுத் தந்தவர்கள் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் மற்றும் அறிஞர் அண்ணா.

தான் ஒரு திராவிடக்கட்சி என்று சொல்லிக்கொள்ளும் .தி.மு..,- பா..., தலைவரின்பேச்சை ஏன் கண்டிக்கவில்லை? தந்தை பெரியாருக்குப் பதிலாக நரேந்திர மோடியைத் தங்கள் தலைவராக, ஆசானாக, வழிகாட்டியாக .பி.எஸ்., - .பி.எஸ். ஏற்றுக் கொண்டுவிட்டார்களா?

இவ்வாறு அந்தப்பதிவில் .சிதம்பரம் கூறியுள்ளார்.

Comments