கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளுக்கு நேரடியாக வரவேண்டாம்

 சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்

சென்னை, ஏப். 26-- சென்னை திருவல் லிக்கேணியில் உள்ள அரசு ஓமந்தூ ரார் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் கரோனா சிகிச்சைப் பிரிவை சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் 24.4.2021 அன்று ஆய்வு செய்தார். மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு, மருத்துவ மனை தலைமை மருத்துவர் ஜெயந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

கரோனா தொற்று உறுதியானால் பதற்றம் அடையாமல் அருகில் உள்ள காய்ச்சல் கண்காணிப்பு மய்யத்துக் குச் செல்ல வேண்டும். சென்னையில் 12 மய்யங்கள் உள்ளன. அங்கு சென் றால் சிடி ஸ்கேன்உள்ளிட்ட தேவை யான பரிசோதனைகளை செய்து பாதிப்பை பொறுத்து, வீட்டிலேயே சிகிச்சை,கரோனா கண்காணிப்பு மய்யம் அல்லது மருத்துவமனையில் சிகிச்சைபெறுவதற்கு மருத்துவர்கள் அனுப்பி வைப்பார்கள். தொற்று உறுதியானவர்கள், சென்னை மாநக ராட்சி கட்டுப்பாட்டு அறையை 044--46122300, 044--25384520 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் 104, 108 என்ற எண்களையும் தொடர்பு கொண்டால் அவர்களே வந்து காய்ச்சல் கண்காணிப்பு மய்யத் துக்கு அழைத்துச் செல்வார்கள்.

தொற்று பாதிக்கப்பட்டவர்கள் மொத்தமாக மருத்துவமனைக்கு வரும்போது படுக்கை வசதி இல்லா தது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. கரோனா சிகிச்சைக்கு 40 சதவீதம் படுக்கைகள் காலியாகவுள்ளன. இந்த படுக்கைகள் ஆக்சிஜன் தேவைப்படுப வர்களுக்கு ஒதுக்கீடுசெய்ய வேண்டும். ஆக்சிஜன் தேவையில்லாதவர்கள் வீடுகளுக்கும், கரோனா கண்காணிப்பு மய்யங்களுக்கும் செல்ல வேண்டும் என்பதே எய்ம்ஸ் போன்ற மருத்துவ வல்லுநர்களின் கருத்தாகும்.

கரோனா சிகிச்சைக்குத் தேவை யான மருந்துகள் கையிருப்பில் உள் ளன. ஆனால், வீட்டில் இருக்கும் சிலர் தானாகவேரெம்டெசிவிர்மருந்தை வாங்கி போட்டுக் கொள்கின்றனர். இது தவறானது. தொற்று பாதிக்கப் பட்ட அனைவருக்கும்ரெம்டெசிவிர்தேவையில்லை.

சென்னையில் உள்ள அனைத்துஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை களிலும் கூடுதலாக 2,400 ஆக்சிஜன் படுக்கைகளை ஏற்படுத்துமாறு முதல் வர் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாநகரில் உள்ள அரசு புறநகர் மருத்துவமனையில் சிறிய அளவில் தானாக ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மய்யம் தொடங்கப்பட உள்ளது. இங்கு ஒரு நிமிடத்தில் 150 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும்.

அனைத்து மாவட்டங்களிலும் சித்த மருத்துவத்தைத் தொடங்க சொல்லியிருக்கிறோம். சென்னையி லும் சித்த மருத்துவ சிகிச்சை விரை வில் தொடங்கப்படும். மத்திய அரசு தடுப்பூசிகளை அனுப்பிவருவதால் தட்டுப்பாடு குறைந்துள்ளது. தமிழக அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், 18 வயதுக்கு குறைந்த வர்கள், கரோனா தொற்று பாதிப்புள் ளவர்கள் கரோனா தடுப்பூசி போட் டுக் கொள்ளக்கூடாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கரோனா சிகிச்சைக்கு கூடுதலாக 363 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மினி கிளினிக்கில் உள்ள 1,645 மருத்துவர்கள் அந்தந்த மாவட்ட கரோனா மருத்துவமனைகளுக்கு பணிக் குச் செல்ல அறிவுறுத் தப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் திட்டமிடப்பட்டுள்ள அறுவை சிகிச்சை களை ஒத்திவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், மருத்துவ மனைகளில் கூட்டம் கூடுவதைத் தடுக்க 10 நாள்களுக்கு புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு நிறுத்தப்படுகிறது என்றும் கூறினார்.

Comments