காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவுப்படுத்தப்பட்டால் சிறீஅரிக்கோட்டா ராக்கெட் ஏவுதளம் மண் அரிப்பால் காணாமல் போகும்:ஆய்வுத்தகவல்

சென்னை,ஏப்.11 சென்னை காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவுப்படுத்தப்பட்டால் சிறீஅரிக்கோட்டாவில் உள்ள இந்திய ராக்கெட் ஏவுதளம் மண் அரிப்பால் காணாமல் போகும் என்று ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு முடிவில் உறுதியாகி உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள சிறீஅரிக்கோட்டா என்னும் தீவில் இருந்து தான் இந்தியாவின் அனைத்து ராக்கெட்டுகளும் ஏவப்பட்டு வருகின்றன.

ஆனால் இந்த தீவில் கடந்த சில மாதங்களில் சுமார் 200 முதல் 300 மீட்டர் நீளத்திற்கு கடல் அரிப்பு ஏற்பட்டு இருப்பது செயற் கைக்கோள் படங்கள் மூலம் உறுதியாகி உள்ளது.

இதற்கு காரணம் சென் னையில் உள்ள துறைமுகங் களில் ஏற்படுத்தப்பட்டுள்ள நீர்முறிவு எனப்படும் கட்டு மானங்கள் தான் என்று தெரியவந்துள்ளது. இந்த கடல் அரிப்பை தேசிய, மத்திய கடற்கரை ஆராய்ச்சி மய்ய விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

எனவே அதானி வசம் உள்ள சென்னை காட்டுப் பள்ளி துறைமுகத்தை எந்தக் காரணத்தை கொண்டும் விரிவுப்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று சுற்றுசூழல் துறை ஆர்வலர்கள் எச்ச ரிக்கை விடுகின்றனர்.

கடல் மட்டத்தில் ஏற் படும் மாற்றம் மற்றும் கடலில் உருவாகும் குறைந்த காற்ற ழுத்தமும் கடல் அரிப்புக்கு காரணமாக கூறப்படு

கிறது. ஒரு செயற்கை கடற் கரை அல்லது துறைமுகம் அமைக்கப்படும் போது, தெற்கு பகுதியில் மணல் குவிந்து வடக்கு பகுதியில் மண் அரிப்பு ஏற்படும் என் பது சுற்றுசூழல் ஆர்வலர் களின் கருத்தாக உள்ளது.

மெரினா கடற்கரை நிர்மாணம் செய்யப்பட்ட போது. திருவொற்றியூரில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடல் புகுந்ததையும் காட்டுப் பள்ளி துறைமுகத்தில் கிரா மம்  ஒன்று அழிந்ததையும்  சுற்றுசூழல் ஆர்வலர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

Comments