மறைவு

திருத்துறைப்பூண்டி இளைஞரணி பொறுப்பாளர் மாதவன் டெல்டா என்று அழைக்கப்படும் மாதவன் நேற்று (14.4.2021) காலை இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரது உடலுக்கு திருத்துறைப்பூண்டி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

மாவட்ட செயலாளர் சு.கிருஷ்ண மூர்த்தி தலைமையில் திருவாரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா.சிவக்குமார், திருவாரூர் மண்டல மகளிரணி செயலாளர் கோ.செந்தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்  கலைஞர்கள் சங்கம் சத்திய சீலன், திருவாரூர் மண்டல மாணவர் கழகச் செயலாளர் அஜெ. உமாநாத், திருத்துறைப்பூண்டி மாவட்ட  பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் ரெ. புகழேந்தி, மன்னார்குடி மாவட்ட துணைச் செயலாளர் விக்கிரபாண்டியம் வீ.புட்பநாதன் திருத்துறைப்பூண்டி  நகர தலைவர் தி.குணசேகரன், ஒன்றிய செயலாளர் தலைவர் சு.சித்தார்த்தன், மாவட்ட இளைஞரணி தலைவர் நா. சுரேஷ் முரளி, செயலாளர் மு.மதன், நகர செயலாளர் .நாகராஜன், ஆகியோர் கலந்து கொண்டு இறுதிமரியாதை

செலுத்தினர்.

Comments