செய்தியும், சிந்தனையும்....!

 விளம்பரத்தில் மட்டும் குறைச்சல் இல்லை

*         உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் தடுப்பூசி போடுவதில் பிரிட்டனில் 67 விழுக்காடு - இந்தியாவிலோ வெறும் 5.2 விழுக்காட்டின ருக்குத்தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

>>           இந்த நிலையில் தடுப்பூசிப் பஞ்சமாம்!

நாள்தோறும் சென்னை சென்ட்ரல் ஸ்டேசனில் நின்று பாருங்கள்!

*           வட மாநிலங்களில் ஏராள வேலை வாய்ப்புகள் உள்ளன - எனவே இந்தி படியுங்கள்.

- ‘தினமலர் 'ஏடு சிறப்புக் கட்டுரை

>>           அப்படியா? வட மாநிலங்களிலிருந்து வேலை தேடி தமிழ்நாட்டிற்கு வந்து குவிவது ஏன்?

ஜோதிடத்தக்குத்தான் வெளிச்சம்

*           அந்தியூரில் கள்ளக்காதலில் ஜோதிடர் படுகொலை.

>>           ஜோதிடருக்கு எப்படி தெரியாமல் போனதாம்?

அண்ணா ஆணைக்குநாமமா?'

*         அரசு அலுவலகங்களில் தலைவர்களின் புகைப்படங்கள் - சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் முடிவைப் பொறுத்தது.

- சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

>>           அரசு அலுவலகங்களில் எந்த மத சம்பந்தமான கடவுள் படங்களும் வைக்கக் கூடாது என்ற முதலமைச்சர் அண்ணாவின் ஆணை என்னாயிற்று?

ஹெல்மட்' போலத்தான்!

*           முகக்கவசம் அணியாத 1118 பேர் மீது சென்னையில் வழக்கு.

>>           முகக்கவசம் அணிவது யாருக்காகவோ அல்ல - நமக்காகத்தான்!

அடுத்த தேர்தலும் வந்துவிட்டதே!

*           தேர்தல் முடிவு - ஒரு மாத இடைவெளி - பலரும் கண்டனம்.

>>           தி.மு.. - அப்பாவு தொடுத்த வழக்கில், வாக் குகள் எண்ணப்பட்டும், முடிவை அறிவிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் சொல்ல வில்லையா?

எல்லாம் விசித்திரம்தான்!

அசல் ஏமாற்று வேலை!

*           கேரள தேர்தலில் சிறுபான்மையினர் பத்துப் பேருக்கு வாய்ப்பளித்தது பா...

>>           .பி., பீகாரில் ஒரே ஒரு சிறுபான்மை யினருக்காவது வாய்ப்பளித்ததா பா... - அதேபோல, பா... எம்.பி., என்று சொல்லிக் கொள்ள ஒரே ஒருவர் உண்டா?

யார் நம்புகிறார்கள்?

*           தமிழ்ப் புத்தாண்டு பிரபவ வருட ராசி பலன்களை ஏடுகள் வெளியிடுகின்றன.

>>           விஞ்ஞானம்மூலம் அஞ்ஞான கிருமிகள் பரப்பு!

அதுதான் இது (வாழைப்பழக் கதை)

*           உரவிலை 60 சதவிகித அளவுக்கு உயர்வு.

>>           விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்கு உயர்த்தப் போகிறோம் என்று பிரதமர் கூறினாரே, அதுதான் இது.

(அலங்)கோலம்தான்!

*          தடுப்பூசித் திருவிழா (உத்சவ்) - பிரதமர் அறிவிப்பு!

>>           பா... ஆட்சியில் எல்லாம்திருவிழாக் (அலங்)கோலம்'தான்.

இதெல்லாம்ஓவர்' இல்லையா?

*           பா... போட்டியிடும் 20 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

- எல்.முருகன், மாநில பா... தலைவர்

>>           ஆம்! வெற்றிகரமான தோல்வியைத் தழுவும்.

இதுவரை மாங்காய் மடையன் என்றுதான் கேள்விப்பட்டுள்ளோம்!

*           கோவிலில் தேங்காய் உடைக்கும்போது சரி பாதியாக உடைந்தால் சிறப்பு. தேங்காய் குறுக்கில் உடைந்தால் கேடாம் - ஒரு நாளேட்டில் சோதிடப் பகுதியில்.

>>           எப்படியும் பாதி தேங்காய் குருக்களுக்குப் போகும் - அது அவருக்கு இலாபம்தானே!

Comments