கும்பமேளாவால் பேரபாயத்தை நெருங்கும் அரித்துவார்

 'கங்கை அன்னை அனைத்தையும் பார்த்துக் கொள்வார்' என்று முதல்வர் அலட்சிய பதில்

அரித்துவார், ஏப். 16 உத்தரகாண்ட் மாநிலம் அரித்துவாரில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் 5 நாட்களில் 2,167 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து விழிப்புணர்வை ஊட்ட வேண்டிய உத்தரகாண்ட் முதல்வர்   தீர்த் சிங் ராவத், கும்பமேளாவில் கூடும் கூட்டம் குறித்து கேள்வி எழுப்பு கிறார்கள், கிண்டல் அடிக்கிறார்கள். கங்கை அன்னையின் ஆற்றல் குறித்து தவறாகக் கணக்கிடுகிறார்கள். கும்ப மேளாவில் கலந்துகொண்டு கங்கை யில் தலைமுழுக்கு போடுங்கள். கங்கை கரோனாவை அழித்துச் சென்று விடுவாள் என்று அலட் சியமாக பதில் கூறியுள்ளார்.

 உலகம் முழுவதும் கரோனா கட்டுக்கடங்காமல் பரவிக்கொண்டு வருகிறது அய்ரோப்பிய நாடுகளில் மூன்றாம் அலை கொடூரமாகப் பரவி வரும் நிலையில் இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது, இந்த நிலையில் அரித்துவார் நகரில் கும்பமேளா துவங்கி நடந்து வரு கிறது, கூட்டத்தைக் குறைக்க  கும்ப மேளாவை முன்கூட்டியே நிறுத்த மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்த போதிலும்  அம்மாநில அரசு அலட்சியமாக உள்ளது.

 கும்பமேளா நடைபெற்று வரும் உத்தரகாண்ட் மாநிலத்திலும் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் 14.4.2021 அன்று ஒரு நாள் மட்டுமே 1953 பேருக்கு கரோனா உறுதியானது. அரித்து வாரில் நடைபெற்று வரும் கும்ப மேளாவில் கலந்துகொள்ள  ஒவ் வொரு நாளும் லட்சக்கணக்கில்  திரண்டு வருகின்றனர்.

 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கும்பமேளாவில் கங்கை நதியில்  நீராட  அரித்துவாருக்கு   பல லட்சம் பக்தர்கள் வருகை தருகின் றனர்.  ஆனால் இத்தனை லட்சம் பேரும் சமூக இடைவெளியைப் பின் பற்றாமல், முகக்கவசம் எதுவும் அணியாமல் ஒரே நேரத்தில் கங்கை நதியில்  நீராடுவதுதான் பெரும் கவலைக்குரியதாகிவிட்டது.

அரித்துவார் நகரில் கடந்த அய்ந்து நாட்களில் மட்டும் 2167 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கங்கையில் முகாமிட்டுள்ள சாதுக்களின் அமைப்புகளின் அகாடாக்களின் தலைவர்களும் கூட கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 இருப்பினும் உத்தரகாண்ட் முதல்வர் தீரத்சிங் ராவத்தோ, அரித்துவாரில் கங்கை மாதா அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார். கரோனாவின் பிடியில் இருந்து எங்களை கங்காதேவி காப்பாற்றுவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது என்கிறார்.

 அத்துடன் கும்பமேளா என்பது 3 மாதங்கள் நடைபெறக் கூடியது. அதை முன்கூட்டியே நிறுத்துவது சாத்தியமில்லை என்றும் தீரத்சிங் ராவத் திட்டவட்டமாகக் கூறியுள் ளார்.  இதனால் அரித்துவார் நகரில் கரோனா பரவல் மிக வேகமாக உச்சத்தை எட்டும் அபாயம் உள்ளது. அரித்வார் நகரில் முகாமிட்டுள்ள அதிகாரிகளாலும் பக்தர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இதனால் அரித்வார் நகரமானது கரோனாவால் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும் அபா யத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்கின்றனர் உத்தரகாண்ட் சுகா தாரத்துறை அதிகாரிகள்.

Comments