தொழுகையைவிட மக்களைக் காப்பதற்கு முன்னுரிமை குஜராத்தில் தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்ட மசூதிகள்

காந்திநகர், ஏப். 21- கரோனா சிகிச்சைக்காக 50 படுக்கைகளு டன் கூடிய மருத்துவமனை யாக குஜராத்தின் வதோதரா வின் மசூதி மாற்றப்பட்டுள் ளது. இங்கு தொழுகை நடத் துவதை விட உயிர்களைக் காப்பது முக்கியம் என அதன் நிர்வாகிகள் கருத்து கூறியுள் ளனர். கரோனாவின் இரண் டாவது அலையால் நாடு முழுவதிலுமான மாநிலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதில் மராட்டிய மாநிலம் மற்றும் குஜராத் மாநிலத்தில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால், அம்மாநிலங்களில் கரோனா தொற்றால் பாதிக் கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் இடமில்லாத சூழல் ஏற் பட்டுள்ளது. இதுபோன்ற ஒரு சூழலில் உதவ பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் தம் வழிபாட்டுத் தலங்களை அளிக்க முன்வந்துள்ளனர்.

இந்தவகையில், குஜராத் தின் வதோதராவிலுள்ள ஜஹாங்கீர்புராவின் முஸ்லிம் கள் மசூதியை 50 படுக்கைக ளுடன் கரோனா நோயாளி களுக்கான தற்காலிக மருத் துவமனையாக மாற்றிவிட் டனர். இதனுள் ஜாதி, மத பேதமின்றி அனைவரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

கோத்ரா மசூதி

குஜராத்தின் மற்றொரு முக்கிய நகரமான கோத்ரா வின் மசூதியிலும் ஒரு பகுதி கரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஷேக் மஹாவர் சாலையிலுள்ள ஆதம் எனும் மசூதியின் தரைத்தளமும் மருத்துவ மனையாக செயல்பட்டு வரு வது குறிப்பிடத்தக்கது.

Comments