கரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள கண்காணிப்பு அலுவலர்களாக மூத்த அய்ஏஸ் அதிகாரிகள் நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, ஏப். 9- கரோனாவைக் கட்டுப்படுத்த அனைத்து மாவட்டங்களுக்கும் மூத்த அய்ஏஸ் அதிகாரிகள் கண் காணிப்பு அலுவலர்களாக நிய மனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில், தமிழ்நாட்டில் தற்போது பெருகிவரும் கரோனா வைரஸ் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த சில செயல் பாடுகளுக்கு தடை விதித்து அரசு ஆணை வெளியிட்டு உள்ளது. அதனில், பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் நோய்த்தொற்றை குறைக்கும் பொருட்டு, மாநக ராட்சியின் ஒவ்வொரு மண் டலத்திற்கும் கள அளவிலான குழுக்கள் அமைத்து கண்காணிக் கப்படும் எனவும், அதே போன்று அனைத்து மாவட்டங்களி லும் கண் காணிப்புக் குழுக் கள் அமைக்கப்படும் எனவும் அரசு ஆணையிட்டுள்ளது.

அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திற்கும் (15 மண்டலம்) மூத்த இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் தலைமையிலான மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல் துறை உயர் அலுவலர்கள் மற் றும் பொது சுகாதாரத்துறை யின் துணை இயக்குநர் நிலை மற்றும் அதற்கு மேல் உள்ள மருத்துவ அலுவலர்களை உள்ளடக்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதே போன்று, கரோனா நோய் தொற்றை கட்டுப் படுத்த, அனைத்து மாவட் டங்களுக்கும் மூத்த இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்க ளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி அலுவலர்கள் பெருநகர சென்னை மாநக ராட்சி மண்டலம் / மாவட் டங்களுக்கு சென்று கரோனா நோய் தடுப்பு பணிகளை முடுக்கிவிடவும் / கண்காணிக் கவும் அறிவுறுத்தப் பட்டுள்ள னர். மேலும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி களை துரிதப்படுத்தவும், தொழிற் சாலை / அலுவலகங்கள் போன்ற இடங்களில் 45 வய துக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்வதை கண்காணிக்கவும் அறிவுறுத் தப்பட்டுள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments