ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

·             இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் மதமாற்ற தடைச் சட்டம், லவ் ஜிகாத் சட்டம் இயற்றிவிட்டு, எந்தவொரு மதத்தையும் பின்பற்ற உரிமை உண்டு எனக் கூறுவது பொய்யான நம்பிக்கையாகும் என மூத்த பத்திரிக்கையாளர் ஆகார் படேல் குறிப்பிட்டுள்ளார்.

·             தெலங்கானா உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர்க்கான இட ஒதுக்கீடு 34 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக குறைக்கப்பட்டதை எதிர்த்து 2019இல் தொடரப்பட்ட வழக்குக்கு இன்னமும் அரசு சார்பில் பதில் தாக்கல் செய்யப்படாததற்கு அய்தராபாத் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·             பாப்ரி மஜீத் இடிப்பு வழக்கில் எல்.கே.அத்வானி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்ட ஓய்வு பெற்ற சிறப்பு சிபிஅய் நீதிபதி சுரேந்திர குமார் யாதவ், .பி.  யோகி அரசால், துணை லோகாயுக்தா பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·             மேற்கு வங்க தேர்தலில் 24 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தனக்கு தடை விதித்துள்ள தேர்தல் ஆணையத்தின் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா மறியல் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.

தி டெலிகிராப்:

·     பஞ்சாயத்து தேர்தலில் பாஜக ஆதரவு வேட்பாளருக்கான பிரச்சாரத்திற்காக ராம்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத் திற்குச் சென்ற உத்தரப்பிரதேச மாநில ஜல் சக்தி அமைச்சர் பல்தேவ் சிங் அவுலாக், கிராமவாசிகள், விவசாயிகளால் விரட்டப்பட்டார். கறுப்புக் கொடி ஏந்தி, அமைச்சருக்கும் பாஜகவிற்கும் எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

·     அமெரிக்காவில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிலாய்டைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மினியாபோலிஸ் காவல்துறை அதிகாரி டெரெக் சாவின் வழக்கு விசாரணைக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் ப்ரூக்ளின் மய்யத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. மினியாபோலிஸ் புறநகரில் கோபமான போராட்டங்கள் வெடித்ததால் காவல்துறையினர் கண்ணீர்ப்புகை மற்றும் ரப்பர் தோட்டாக்களை வீசினர். போக்குவரத்து நிறுத்தத்தின் போது 20 வயது கறுப்பினத்தவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

·     கரோனா தடுப்பு நடவடிக்கையைடிக்கா உட்சவ்அதாவது தடுப்பூசி கொண்டாட்டம் என பிரதமர் மோடி அறிவித்துவிட்டு, உரிய தடுப்பூசி மருந்துகளை மாநிலங்களுக்கு அனுப்ப இயலாததால்,  பல மாநிலங்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உரிய திட்டமிடாத நிலையில், பிரச்சினையை மாநிலங்கள் தலையில் சுமத்தும் போக்கு உள்ளது என தலையங் கத்தில் கூறப்பட்டுள்ளது.

- குடந்தை கருணா

13.4.2021

Comments