மீனவர்களைக் கொன்ற இத்தாலி மாலுமிகள் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்ய பா.ஜ.க. அரசு முறையீடு

புதுடில்லி. ஏப்.8 குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி அன்று பிர்டி என்பவரின் படகில் 11 மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.   இவர்கள் கேரளாவின் கொல்லம் மீன்பிடி துறைமுகம் அருகே இந்தியக் கடல் எல்லைக்குட்பட்ட அரபிக் கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.

அப்போது என்ரிகா லாக்சி என்னும் இத்தாலி நாட்டு எண்ணெய் சரக்கு கப்பல் ஒன்று அக்கே வந்தது.  அதில் இருந்த மாலுமிகள் மீன்பிடி படகை நோக்கி சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.   இந்த துப்பாக்கி சூட்டில் அஜீஸ் பிங்க், ஜெலஸ்டின் ஆகிய இரு மீனவர்கள் உயிர் இழந் தனர்   மேலும் 9 மீனவர்கள் காயம் அடைந்தனர்.

எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றம் இந்த வாதத்தை நிராகரித்தது.  இந்த விவகாரம் இதன் பின்னர் சர்வதேச நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.  அங்கு இந்திய எல்லைக்குள் சென்று இந்திய மீனவர்களை இத்தாலி மாலுமிகள் சுட்டது தவறு எனத் தீர்ப்பு அளிக்கப் பட்டது.  ஆனால் இத்தாலி மாலுமிகளுக்குத் தண்டனை அளிக்க வில்லை.  மாறாக இத்தாலி அரசு இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

மத்திய அரசு இதையொட்டி உச்சநீதிம ன்றத்தில், “நாங்கள் மரணமடைந்த மீனவர்கள் குடும்பத்துக்கு உரிய இழப்பீட்டைப் பெற்றுக் கொடுத்துள்ளோம்.   இத்தாலி அரசு இரண்டு மாலுமிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெறும் என உறுதி அளித்துள்ளது.  எனவே வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்என மனுத் தாக்கல் செய்தது.  இந்த வழக்கு விசாரணை நாளை அதாவது ஏப்ரல் 9 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

 இதுதான் மோடியின் உண்மை முகம் 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது கொச்சியில் பேசிய மோடி நான் பிரதமர் ஆனால் கேரள மீனவர்களைக் சுட்டுக்கொலை செய்த இத்தாலி கடற்படை யினருக்கு தக்க தண்டனை வாங்கிகொடுத்து நீதியைக் காப்பேன் என்று சபதம் எடுத்தார். இப்போது கொலைகாரர்களைக்  காப்பாற்ற என்ன என்ன வழிமுறைகள் உள்ளதோ அத்தனையும் செய்துகொண்டு இருக்கிறார்

Comments
Popular posts
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
50% தடுப்பூசிகளை அபகரித்த 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள்
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image