ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     மான் கி பாத்' யாருக்கு தேவை? கரோனா பற்றியும் மாநிலங்களுக்கு உரிய தடுப்பு மருந்தினை அளிப்பது பற்றியும்  பிரதமர் பேச வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என மேற்கு வங்க முதல்வர் மம்தா சாடினார்.

தி ஹிந்து:

·     கரோனா தடுப்புக்கான உதவிகளை இந்தியாவிற்கு அளித்திட அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணைத் தலைவர் கமலா ஹாரிஸ் உறுதி. முன்னதாக, அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் கரோனா தடுப்புக்காக இந்தியாவுக்கு ஆதரவாகவும், உதவிகளையும் விவரித்து அறிக்கை வெளியிட்டது.

தி டெலிகிராப்

·     உத்தரப்பிரதேச அரசாங்கத்தால் இரண்டு முறை கைது செய்யப்பட்டு, மாநில ஒடுக்குமுறைக்கு எதிரான எதிர்ப்பின் அடையாளமாக வெளிவந்த கோரக்பூர் மருத்துவரும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துபவருமான கபீல் கான், வங்காள வாக்காளர்களைபாசிஸ்டுகளின் வித்தைகளுக்குஇரையாக வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.

·     பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை நடத்தியமான் கி பாத்' நிகழ்ச்சியில்,  கோவிட் தொற்று "நமது பொறுமையை சோதிக்கிறது" மற்றும் "துயரத்தைத் தாங்கும் திறனை" சோதித்துப் பார்த்தது என்று பேசினார். ஆனால் நாட்டில் பல உயிர்களைக் கொன்ற ஆக்சிஜன் நெருக்கடி குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

பி.பி.சி. நியூஸ் தமிழ்:

·   இந்தியாவில் ஒரே நாளில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, தொடர்ந்து நான்காவது நாளாக 3 லட்சம் பேருக்கு மேல் பதிவாகி இருக்கிறது. அதே போல கரோனாவால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் ஒரே நாளில் இறப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அய்ந்தாவது நாளாக 2,000 பேருக்கு மேல் பதிவாகி இருக்கிறது.

- குடந்தை கருணா

26.4.2021

Comments