செய்தியும், சிந்தனையும்....!

 மயிலே மயிலே என்றால்...?

*          கரோனா கட்டுப்பாடுகள் பலன் அளிக்காவிடின், இரவு நேர ஊரடங்கு அமல்!   - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

>>           மக்களின் அலட்சியம் - வாழ்க்கையின் முடிவும் நிச்சயம்? 

சபாஷ், சரியான தீர்ப்பு

*           பசுமைத் தீர்ப்பாய உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம்  - உயர்நீதிமன்றம் தடை!

>>           மனுநீதி நியமனத்திற்கு உயர்நீதிமன்றம் தடை என்று கருதலாம்.

'சூ'ரப்பா அல்லவா!

*           அண்ணா, பல்கலைக் கழகத் துணைவேந்தர் மீதான விசாரணை 15 நாட்களுக்குள் முடிக்க திட்டம்  

>>           இந்த இலட்சணத்தில் மேலும் பதவி நீட்டிப்பு வேண்டுமாம் - சூரப்பாவின் ஆசை!

நோட்டாவைப் பயன்படுத்தலாமே!

*          தமிழகத் தேர்தலில் வாக்களிக்காதவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 70 லட்சம்.

>>           சோம்பலா - அலட்சியமா - தேர்தலில் நம்பிக்கை யற்ற தன்மையா?

ஊருக்குத்தான் உபதேசமா?

*           கரோனா அதிகம் பரவியதற்குக் காரணம் தலைவர்களின் தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் திரண்டதுதான்.   - பா... செய்தித் தொடர்பாளர்  

>>           பிரதமர் மோடி விதி விலக்கா? பிரதமர் வந்தார். ஆனால் கூட்டம் வரவில்லையே - என்று சமாதானம் சொன்னாலும் சொல்லுவார்கள் - யார் கண்டா?

நோபல் பரிசு பெற வேண்டாமா?

*           இந்தியர்களுக்கு முன்னுரிமை தராமல் கரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்வதா? 

- ராகுல் காந்தி வினா

>>           விளம்பரத்துக்குப் பயன்படாதே!

சரிவின் சரித்திரம்

*           இந்தியாவில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் தொடர் சரிவு.  

>>           பதுங்குவது பாய்வதற்காகத்தான் என்று சொன்னாலும் சொல்லுவார்களோ!

கை  வந்த கலை

*           மே.வங்கத்தில் பா... வெற்றி பெறும் என்று தாம் கூறியதாக - திரிணாமுலுக்கு வியூகம் வகுத்துக் கொடுத்த பிரசாந்த் கிஷோர் கூறியதாக - அவரது உரையைத் திரித்து வெளியிட்ட பா...வுக்குக் கிஷோர் கண்டனம்.   

>>           திரிப்பது, சிதைப்பது எல்லாம் பா... சங் பரிவார்க்குக் கை வந்த கலை.

விளம்பரம்தானா?

*           10 கோடி தடுப்பூசி போட்டு - இந்தியா சாதனை.    

>>           தடுப்பூசிப் பற்றாக்குறையைச் சரி செய்யக் கவனம் முதலில் தேவை!

Comments