இலவசங்களால் முன்னேற்றம்தான் ஏற்பட்டுள்ளது

பொருளாதார வல்லுநர் அபிஜித் தகவல்

கொல்கத்தா, ஏப். 15- இலவசத் திட் டங்களால், நாட்டில்முன்னேற்றம்தான் ஏற்பட்டுள்ளது;மாறாக, மக்கள் சோம் பேறியாகின்றனர் என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என்று, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞருமான அபிஜித் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பந்தன் - கொன்னகர் என்ற தன்னார்வதொண்டு நிறுவனம் மற்றும் சிறுநிதி வங்கியின்

20-ஆவது ஆண்டு விழா, கடந்த 11.4.2021 அன்று நடைபெற்ற நிலையில், அதில் அபிஜித் கலந்துகொண்டு பேசியுள்ளார். 

அப்போது, அவர் மேலும் கூறியிருப் பதாவது: உலகமயமாக்கலின் பயனாக இந்தியா  1990-களின் முற்பகுதியிலிருந்து இன்று வரை பெரும்பாலான நாடுகளை விட ஏற்றுமதியில்   வேகமாக வளர்ந் துள்ளது. உலகமயமாக்கலானது, தடை யற்ற வர்த்தகத்திற்கு அழைப்பு விடுக்கும் அதே வேளையில், புதிய வடிவிலான அபாயங் களையும் கொண்டு வருகிறது. தற்போது உலகமயமாக் கப்பட்ட உலகில் வறுமைக்கு எதிரான போராட் டம் மிகவும் சிக்கலானதாகி விட்டது. புதிய அபாயங்களுக்கு சிறந்த எடுத்துக் காட்டுகளில் கோவிட் தொற்றுநோய் ஒன்றாகும்.

பொறிமுறை தேவை

இதன்மூலமான பொதுமுடக்கத்தால், உலகெங்கிலும் ஏழைகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.உலகமய மாக்கல் நம் நாட்டில் மட்டுப்படுத்தப் பட்ட வெற்றியையே பெற்றுள்ளது, காரணம் ஆபத்து குறைப்பு பொறி முறையை உருவாக்குவதில் நாம் போது மான கவனம் செலுத்தவில்லை.உலக மயமாக்கல் அதிக அபாயங்களைக் கொண்டுள்ளது, அவற்றைக் கட்டுப் படுத்தவும், உலகமயமாக்கலின் சக்கரங் களைத் துளைக்காமல் இருப்பதற்கும் நமக்குஅதிக தாக்கமுள்ள மற்றும் நுணுக் கமான இடர் குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் பொறிமுறை தேவை.

உலகமயத்துடன், வளங்களும்சேர்ந்து வந்தால், அந்த அபாயங் களை நாம் சமாளிக்க முடியும். பிரச்சினைகள் அனைத்தையும் ஏழை மக்களே எதிர் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால், இவ்வளவு காலத்தில், அவர்கள் மீது குறைவான கவனமே செலுத்தப் பட்டது. வறுமைக் குறைப்பு மற்றும் பிற சமூகபொருளாதார தாக்க நடவடிக்கை களை இலாப நோக்கற்ற மற்றும் தனியார் நிறுவனங்கள் வசம் விடப்பட்டன.

ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம்  போன்றவை உருவாக்கப்படும் வரை, பெரும்பாலும் தொண்டு நிறுவனங்களே ஏழை மக்களின் சுமையை பகிர்ந்து கொண்டன. ஆனால் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் போன்றவைஅமல்படுத்தப்பட்ட அய்ந்து ஆண்டுகளில், அத்திட்டம் கிட்டத்தட்ட பல்லாயிரக்கணக்கான மக்களை வறுமையிலிருந்து வெளியேற்றி யுள்ளன. ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயருவதற்கு அரசின் தலையீடு குறைவாக இருக்க வேண்டும் என்றசித்தாந்தம் முற்றிலும் நிராகரிக்கப் படக் கூடியது. ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகியபல்வேறு பொருளா தார சூழல்களைஉள்ளடக்கிய நாடுகளில் கடந்த பத்தாண்டுகள் மேற்கொள்ளப் பட்ட ஆய்வில் இதுபோன்ற அரசின் உதவியை மறுக்கும் சித்தாந்தங்கள் எந்தவித பலனையும் அளிக்கவில்லை.

ஆதாரங்கள் காணப்படவில்லை

இலவசங்கள் கொடுத்தால் மக்கள் சோம்பேறிகளாக மாறிவிடுவர் என்பதை நிரூபிக்க இதுவரைஎந்த ஆதாரத்தையும் எங்கும் நாங்கள் காணவில்லை. குறிப் பாக, இந்தியாவில் கூட அதற்கான ஆதாரங்கள் காணப்படவில்லை. அதற் குப் பதிலாக அனைத்து இடங்களிலும் நாங்கள் முன்னேற்றங்களையே காண்கி றோம்.

நீண்ட காலமாக வறுமையை எதிர்த் துப் போராடுவதில், சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகளிலிருந்து பெறப்பட்ட ஒரு சிறந்த தரவு உந்துதல் பாடம் இது. பொது மற்றும் அரசுசாரா உதவியால் பயனடைந்தவர்களின் வருமானம் 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது. நுகர்வில் 18 சதவிகித அதிகரிப்பை ஏற்படுத்தி யுள்ளது.

ஏழைகள் சிறந்தவர்களாக மாறும் போது, அவர்கள் அதிக செல்வத்தை உருவாக்குவதில் அதிக படைப்பாற்றல் பெறுகிறார்கள் மற்றும் தங்கள் கிராமங் களிலிருந்து வெகு தொலைவில் உள்ள சிறந்த பள்ளிகளுக்கு தங்கள் குழந்தை களை அனுப்புவது உட்பட சிறந்த வாழ்க்கையை பெறுகிறார்கள்.இவ்வாறு அபிஜித் பேசியுள்ளார்.

Comments