மதவாத அமைப்பு ஆர்.எஸ்.எஸ். அய்ரோப்பிய யூனியன் கருத்து

பாரிஸ், எப்.11- இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் செல்வாக்கு மற்றும் செயல்பாடுகள் குறித்து, ஜெர்மனி மற்றும் பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை தெரிவித்து, கேள்வி எழுப்பி யுள்ளார்கள்.

இந்தியாவிற்கான பிரெஞ்சு தூதர், நாக்பூரிலுள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்திற்கு பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி சென்றது தொடர்பாக, பிரான்ஸ் நாட்டின் வெளியுறவு துறை அமைச் சருக்கு அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதே போல் கடந்த 2019ஆம் ஆண்டு, இந்தியாவுக்கான ஜெர்மனி தூதரும், நாக்பூருக்கு சென்று வந் தார். இந்நிலையில் தான், அய்ரோப் பிய யூனியனில் முக்கிய அங்கம் வகிக்கும் ஜெர்மனி, - பிரான்ஸ் நாடு களின் நாடாளுமன்ற உறுப்பி னர்கள் பலர், ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்தி யாவின் சமகால நிலை குறித்து தங்களின் கவலையை வெளிப் படுத்தியுள்ளார்கள்.

அவர்கள் கூறியுள்ளதாவது; ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆரம்ப கால தலைவர்கள், ஹிட்லர் மற்றும் முசோலினியை ஆதரித்தவர்கள். இந்தியா ஒரு தீவிர இந்துத்துவ நாடு என்ற நிலையை நோக்கி நகர்வதில், ஆர்.எஸ்.எஸ். தனது தீவிர பங்கை ஆற்றுகிறது. இந்தியாவில் தற்போது மக்களின் பேச்சு ரிமை, கருத்துரிமை உள்ளிட்ட அடிப்படையான விஷ யங்கள் மறுக்கப்படுகின்றன.

இந்தியாவில் ஊடகச்சுதந்திரம் நசுக்கப்படுகிறது. இவற்றுக்காக குரல் கொடுக்கும் பிரபலங்கள், சட்டவிரோதமான முறையில் ஒடுக் கப்படுகிறார்கள் அல்லது கொல் லப்படுகிறார்கள். இத்தகைய நட வடிக்கைகளால், அனைவருமே மிரட்டப்படுகிறார்கள். தேசியப் பாதுகாப்பு மற்றும் தேசவிரோதம் என்ற பெயரில், மனித உரிமைகள் தொடர்ந்து நசுக்கப்படுகின்றன.

ஆர்.எஸ்.எஸ். இயக்கம், அமெ ரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள் ளிட்ட வேறு நாடுகளிலும், தனக் கான சொத்துக்களை கொண்டு சில பிரிவினைவாத செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த இயக்கத்தின் தொண் டர்கள், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அரசியல் பிரிவான பா...வின் தேர்தல் வெற்றிக்காக சமூக நல்லி ணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்படுகிறார்கள். இந்தவகையில் பார்க்கையில், பா... இல்லாமல், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் இயங்க முடியும். ஆனால், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் துணையின்றி, பா... வால் இயங்க முடியாது என்ற முடி விற்கே வர முடிகிறது.

பா..., அதிகாரத்தில் இருக்கும் வரை, ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வலி மைப்பட்டுக்கொண்டே செல்லும். எதிர்காலத்தில், ஆர்.எஸ்.எஸ். அலு வலகத்திற்கு, வெளிநாட்டு அரசியல் பிரமுகர்களின் வருகை அதிகரிக்கும்.

அதே நேரம், அந்த வலதுசாரி ராணுவ இயக்கம் தொடர்பான அறிமுகமும் புரிதலும், அதுகுறித்து கருத்துகளும் அதிகரிக்கும் இது மிகவும் கவலைக் குரியதாகும் என்று அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Comments