டில்லி, பஞ்சாப்-அரியானாவின் தலைமை நீதிபதிகளுக்கு கரோனா உறுதி

புதுடில்லி,ஏப்.18- டில்லி மற்றும் பஞ்சாப்-அரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டில்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 15ஆம் தேதி முதல் நேரடி விசாரணை தொடங்கப் பட்டது. ஆனால், மீண்டும் கரோனா பரவலைத் தொடர்ந்து கடந்த 9ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை காணொலி முறையில் விசாரணை நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, கடந்த வாரம் 3 நீதிபதிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மற்ற சில நீதிபதிகளுக்கு அறிகுறிகள் தென் பட்டதால் அவர்கள் தங்கள் வீடு களில் தனிமைப்படுத்திக் கொண் டனர். இந்நிலையில், டில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என்.படேலுக்கு நேற்று (17.4.2021) கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. அவர் வீட்டு தனிமையில் உள்ளார். எந்த அறிகுறியும் இல்லாத நிலையில் அவர் நலமுடன் இருப்ப தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே போல, பஞ்சாப்-அரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரவி சங்கர் ஜாவுக்கும் நேற்று (ஏப்.17) கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, ஏப்.19 முதல் வழக் குகள் அனைத்தும் காணொலியில் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Comments