மலேசியா-பேராக் மாநிலத்தில் பெரியார் பாசறை சார்பில் அன்னை நாகம்மையார் மழலைக் கல்வியகம் வகுப்புகள் தொடக்க - குடும்ப விழா, மரக்கன்று நடும் விழா


பேராக்,ஏப்.26- மலேசியா - பேராக் மாநில பெரியார் பாசறை சார்பில் குடும்ப விழா, மரக்கன்று நடும் விழா அன்னை நாகம் மையார் மழலைக் கல்வியகம் தொடக்க விழா நடைபெற்றது. பாசறை இயக்கத்தோழர்களால் கெ.வாசு அவர்களின் (வயது 77) பிறந்த நாளான 24.4.2021 அன்று முதல்கட்டமாக பிற்பகல் 4.30 அளவில் இலவசக் கல்வி வகுப்பை இயக்கத் தலைவர் முனைவர் வா.அமுதவாணன் தலைமையேற்று நிகழ்வினை தொடங்கி வைத்தார். இனி ஒவ்வொரு வாரமும் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று நாட்களுக்கு மாலை 5.00 மணி முதல் 7.00 வரை கற்றல் கற்பித்தல் தாய்மொழி தமிழ் ஆங்கிலம் , மலாய் வகுப்பு நடைபெறும். அதனையடுத்து கல்வி தலைமையாளர் சு.அன்பரசி தலைமையில் மா மரக் கன்று நடவு  நடைபெற்றது. பின்னர் , தேநீர் நிகழ்வுடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். பெரியார் பாசறை வகுப்பு நடத்துநர் செல்வி அருணா பன்னீர்செல்வம் மற்றும் பலர் குடும்பத்துடன்  விழாவில் பங்கேற்றனர்.

Comments